ஜமாபந்தியில் திரண்ட வி.ஏ.ஓ.,க்கள் தொற்று பரவல் அச்சத்தில் மக்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜமாபந்தியில் திரண்ட வி.ஏ.ஓ.,க்கள் தொற்று பரவல் அச்சத்தில் மக்கள்

Added : ஜூன் 27, 2020
Share

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தியில் கணக்குகளை ஒப்படைக்க வி.ஏ.ஓ., க்கள் திரண்டதால் நோய் தொற்று பரவும் அபாயம் நிலவியது.

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைத் தடுக்க அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என அரசு பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகிறது.இந்நிலையில், விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் நேற்று முன்தினம் முதல் தொடங்கிய ஜமாபந்தி நிகழ்ச்சியில் வி.ஏ.ஓ.,க்கள், தங்கள் உதவியாளர்களுடன் கிராம கணக்குகளுடன் ஜமாபந்தி அலுவலரிடம் சமர்ப்பிக்க திரண்டனர். இதனால், அலுவலக அரங்கில் ஏராளமானோர் கூடியதால் நோய் தொற்று பரவும் நிலை உருவாகியுள்ளது.

தாலுகா அலுவலகம் சென்ற பொதுமக்கள் இந்த கூட்டத்தைப் பார்த்து அதிர்ந்து வெளியேறினர். அரசு கூறும் விதிமுறைகளைபொதுமக்கள் கடைபிடிக்கும்படி ஒருபுறம் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இந்த நிகழ்வைக் கண்டு கொள்ளாமல் விட்டது ஏன் எனதெரியவில்லை.கடந்த 3 மாதங்களாக வி.ஏ.ஓ.,க்கள் அனைவரும் கொரோனா தொற்று தடுப்பு பணியில் இரவு பகலாக தங்களை ஈடுபடுத்தி வருகின்றனர். தங்களது கிராம கணக்குகளை சரிவர பராமரிக்க முடியாத சூழலில், ஜமாபந்தி நிகழ்வால் வி.ஏ.ஓ.,க்கள் பணிச்சுமை காரணமாக மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர்.

எனவே, தற்போதுள்ள நோய் தொற்று பரவலைக் கருத்தில் கொண்டு அதைத் தடுக்கும் விதத்தில் கலெக்டர் ஜமாபந்தி நிகழ்வை தற்காலிகமாக ஒத்தி வைத்து அனைவரையும் நோய் தொற்றிலிருந்துபாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X