அரசியல் செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல் விலை: காங்., நாளை ஆர்ப்பாட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சென்னை; 'பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணமான, மத்திய அரசை கண்டித்து, மாவட்ட வாரியாக, நாளை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்' என, தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி அறிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தொற்று பரவல் காரணமாக, மக்களின் வாழ்வாதாரமும், நாட்டின் பொருளாதாரமும் முற்றிலும் முடங்கி உள்ளது. இருந்தும், மத்திய அரசு மனிதாபிமானமற்ற முறையில், பெட்ரோலிய பொருட்கள் மீதான கலால் வரியை, 12 முறை உயர்த்தியுள்ளது.எனவே, பெட்ரோலிய பொருட்களின் விலையை, மத்திய அரசு உயர்த்தியதை எதிர்த்து, மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் முன், நாளை, மாவட்ட காங்கிரஸ் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு, அழகிரி கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X