பொது செய்தி

தமிழ்நாடு

50 சதவீத மானியத்தில் வேர்க்கடலை விதை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் வேர்க்கடை மற்றும் சிறுதானிய விதைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி, விழுப்புரம் மாவட்ட தாட்கோ மேலாளர் முருகன் தலைமையில் நடந்தது. தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். ஜமாபந்தியில், வேளாண் துறை சார்பில் மேல்மலையனுார் வட்டாரத்தில் 27 ஆயிரத்து 688 ெஹக்டேர் பரப்பில் பயிர் ஒத்திசைவு செய்யப்பட்டது.பின்னர், மேல்மலையனுார் வட்டார வேளாண் அலுவலகத்தில் தமிழ்நாடு மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத் திட்டத்தின் கீழ் காரிப் பருவத்திற்கான புதிய வி.ஆர்.ஐ.-8, ரக வேர்க்கடலை விதை 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

மாவட்ட வேளாண் துணை இயக்குநர் கென்னடி ஜெபக்குமார் விதை விநியோகத்தை துவக்கி வைத்தார்.வேளாண் உதவி இயக்குநர்கள் ஜானகிராமன், ரவிச்சந்திரன், துணை வேளாண் அலுவலர் சங்கர், உதவி வேளாண் அலுவலர்கள் சக்திவேல், வெங்கடேசன், ரகுபதி, சசிகுமார், விஸ்வநாதன், ஷைலா பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X