ராணுவ வீரர்களுக்கு காங்., வீரவணக்கம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர்களுக்கு காங்., வீரவணக்கம்

Added : ஜூன் 27, 2020
Share

சிதம்பரம் : சிதம்பரத்தில் மாவட்ட வர்த்தக காங்., சார்பில் எல்லையில் உயிர் நீத்த ராணுவ வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

சிதம்பரம் காந்தி சிலை அருகில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில பொதுக்குழு உறுப்பினர் சித்தார்த்தன் தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், அகில இந்திய காங்., கமிட்டி உறுப்பினர் மணிரத்தினம், மாநில பொதுக்குழு உறுப்பினர் வெங்கடேசன் முன்னிலை வகித்தனர். நகர பொருளாளர் லட்சுமணன் வரவேற்றார்.மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் விசுவநாதன், சத்தியமூர்த்தி, நுார்அலி, ஜெயச்சந்திரன், ஓபிசி மாநில செயலாளர் குணக்குன்று, ஊடகப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சிவசத்தியராஜா, மாவட்ட துணைத் தலைவர்கள் நசீர் அகமது, கட்டாரி சந்திரசேகர், ஜெயம் ரவி, மாவட்ட விவசாய தலைவர் வினோபா, சிறுபான்மை மாவட்ட தலைவர் ஷாஜகான், இளைஞர் காங்., ஆனந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மாவட்ட துணைத்தலைவர் ரத்தினம் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X