அக்கவுண்டன்ட் தற்கொலை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர், ஏ.பி.டி., ரோட்டை சேர்ந்தவர் பரமேஸ்வரன், 53; தனியார் நிறுவனத்தில் அக்கவுண்டன்டாக பணியாற்றி வந்தார். கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு வேலையை விட்டு நின்றார். வழக்கம் போல் துாங்க சென்றார். காலையில் பார்க்கையில், வீட்டுக்கு வெளியே துாக்குமாட்டி இறந்து கிடந்தார். சென்ட்ரல் போலீசார் விசாரிக்கின்றனர்.டூவீலர் திருடியவர் கைதுதிருப்பூர், கணபதிபாளையத்தை சேர்ந்தவர் சண்முகா, 49. பனியன் தொழிலாளி. இவர் தென்னம்பாளையத்தில் தனது டூவீலரை நிறுத்தி சென்றார். திரும்பி வந்து பார்த்த போது, மர்ம நபர் ஒருவர் டூவீலரை திருட முயற்சி செய்த போது, அவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில், வீரபாண்டியை சேர்ந்த நாகராஜ், 38 என்பதும், பனியன் தொழிலாளி என்பது தெரிந்தது. தெற்கு போலீசார், அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.கிரஷரில் சிக்கி தொழிலாளி பலிவெள்ளகோவில் அருகில், கிரஷரில் சிக்கி, தொழிலாளி பரிதாபமாக பலியானார். மூலனுார் அருகே பொன்னிவாடியை சேர்ந்தவர் கருப்பசாமி, 37. இவர், அப்பகுதியில், பழநியை சேர்ந்த ராஜா என்பவர் நடத்தி வரும், கிரஷர் தொழிற்சாலையில், பணியாற்றி வந்தார். நேற்று மாலை, 4:30 மணியளவில், திடீரென்று, கிரஷர் மெஷினில் சிக்கி, உடல் நசுங்கி உயிரிழந்தார். மூலனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X