சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஏ.டி.எம்., இயந்திரத்தில் கிடந்தரூ.2 ஆயிரம் ஒப்படைப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புவனகிரி : புவனகிரி ஏ.டி.எம்., இயந்திரத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.2 ஆயிரத்தை, பணம் எடுக்க சென்ற ஆசிரியர் போலீசில் ஒப்படைத்தார்.

புவனகிரி அருகே வடதலைக்குளம் மெயின்ரோடு பகுதியில் வசிப்பவர் பார்த்திபன். ஆசிரியரான இவர் நேற்று புவனகிரி ராகவேந்திரர் கோவில் அருகில் உள்ள பாங்க் ஆப் இந்தியா ஏ.டி.எம்., இயந்திரத்தில் பணம் எடுக்க சென்றார்.அவருக்கு முன் பணம் எடுத்தவர் ஏ.டி.எம். இயந்திரத்தில் ரூ.2 ஆயிரத்தை விட்டுச் சென்றுள்ளார். உடன் அங்கிருந்த பணத்தை எடுத்த ஆசிரியர் புவனகிரி போலீஸ் நிலையத்தில் பணியில் இருந்த ஏட்டு முருகேசனிடம் ஒப்படைத்தார்.ஆசிரியரின் நேர்மையான செயலை இன்ஸ்பெக்டர் ராபின்சன், சப் இன்ஸ் பெக்டர் சந்தோஷ் மற்றும் போலீசார் பாராட்டினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X