பொது செய்தி

தமிழ்நாடு

'‛பாரத்நெட்' டெண்டரை ரத்து செய்தது மத்திய அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதால் அதிரடி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
சென்னை; தமிழகத்தில், 'பாரத்நெட்' திட்டத்தின் டெண்டரை, மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை, இணையதளம் வழியாக, மக்கள் பெற வசதியாக, 'பாரத்நெட்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகளுக்கும்,

சென்னை; தமிழகத்தில், 'பாரத்நெட்' திட்டத்தின் டெண்டரை, மத்திய வர்த்தக அமைச்சகம் ரத்து செய்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் அதிர்வை ஏற்படுத்தி உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள, கிராம ஊராட்சிகளை இணைத்து, அரசின் சேவைகளை, இணையதளம் வழியாக, மக்கள் பெற வசதியாக, 'பாரத்நெட்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்தது.தமிழகத்தில் உள்ள, 12 ஆயிரத்து, 524 கிராம ஊராட்சிகளுக்கும், 'ஆப்டிக்கல் பைபர்' வழியாக, இணையதள வசதி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இதற்காக, 'தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன்' என்ற, தனி அமைப்பும் ஏற்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசின் தொலைதொடர்பு துறை மற்றும் தமிழக அரசு இடையே, 2017ல் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.பின், மாநில அரசு அளித்த திட்ட அறிக்கை அடிப்படையில், மத்திய அரசு நிதி ஒதுக்கியது. திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பத்துறை சார்பில், 1,950 கோடி மதிப்பில், 'டெண்டர்' விடப்பட்டது.ஆனால், இதில் ஊழல் நடக்க வழிவகை செய்யும் வகையில், மத்திய அரசின் வரைமுறைகளை மீறி, டெண்டர் விதிமுறைகளில், திருத்தம் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. சில குறிப்பிட்ட பெரிய நிறுவனங்கள் மட்டுமே பங்கு பெறும் வகையில், நிபந்தனைகள் மாற்றப்பட்டுள்ளன என, அறப்போர் இயக்கம் உட்பட பல்வேறு அமைப்புகள், மத்திய அரசுக்கு புகார் அனுப்பின.

தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும், முறைகேடு செய்வதற்கு வசதியாக, விதிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது என, குற்றம் சாட்டின.இதை விசாரித்த, மத்திய வர்த்தக அமைச்சகம், 'டெண்டர் விதிகளை முறையாக பின்பற்றவில்லை' என கூறி, டெண்டரை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து, அறப்போர் இயக்கம் வெளியிட்ட அறிக்கை:அறப்போர் இயக்கம், 2,000 கோடி ரூபாய், பாரத்நெட் டெண்டர் மீது அளித்த புகாரில், மத்திய வர்த்தக அமைச்சகம், 'வீடியோ கான்பரன்ஸ்' வழியாக, 23ம் தேதி விசாரித்தது.அதைத் தொடர்ந்து, டெண்டரை ரத்து செய்யும்படி, மத்திய தொலை தொடர்பு துறைக்கும், தலைமை செயலருக்கும், தமிழக தொலைதொடர்பு துறைக்கும், தமிழ்நாடு பைபர்நெட் கார்ப்பரேஷன் இயக்குனருக்கும் உத்தரவிட்டுள்ளது.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

ராஜினாமா செய்வாரா மந்திரி? தி.மு.க., தலைவர், ஸ்டாலினின் அறிக்கை:பாரபட்சமாகவும், வேண்டிய சிலர் மட்டுமே பங்கேற்கும் வகையிலும் விடப்பட்டுள்ள, 2,000 கோடி ரூபாய், 'பாரத்நெட் டெண்டரை' ரத்து செய்ய வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னை, செயின்ட் ஜார்ஜ் கோட்டை ஊழல், டெல்லி செங்கோட்டை வரை சந்தி சிரிக்கிறது.இதில், 'ஊழல் இல்லை; முறைகேடு இல்லை; மத்திய அரசு தடை விதிக்கவில்லை; எதிர்க்கட்சி தலைவர் இட்டுக்கட்டி பொய்யாக குற்றம் சாட்டுகிறார்' என்றெல்லாம், பச்சைப் பொய் சொன்ன அமைச்சர், தற்போது ராஜினாமா செய்வாரா அல்லது பணிநீக்கம் செய்யப்படுவாரா?முறைகேடாக, டெண்டர் விட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை; முகாந்திரம் இல்லை என, வக்காலத்து வாங்கிய, ஊழல் தடுப்புத் துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை? முதல்வர், ஏற்கத் தகுந்த விளக்கத்தை, தமிழக மக்களுக்கு உடனே தர வேண்டும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.

'டுவிட்டர்' பக்கத்தில், அவர் கூறியிருப்பதாவது:துாத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் கொலை செய்யப்பட்ட, இருவரது பிரேத பரிசோதனை அறிக்கை வராத நிலையில், பென்னிக்ஸ் மூச்சு திணறலில் இறந்தார் என்றும், அவரது தந்தை ஜெயராஜ், உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார் என, முதல்வர் எதனடிப்படையில் சொன்னார்?தவறு அரசின் பக்கம் என்பதால் தானே, அ.தி.மு.க., சார்பில், 25 லட்சம் ரூபாய் கொடுத்தீர்கள். இயற்கையான மரணம் என்றால் கொடுத்திருப்பீர்களா?

போலீஸ் நிலையத்தை, சாத்தான் வேட்டைக்காடாக மாற்றியவர்களை, கொலை வழக்கில் கைது செய்ய வேண்டும். வழக்கை, தமிழக அரசு முறையாக விசாரித்து, ஒழுங்காக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், சி.பி.ஐ., விசாரணை கேட்டு, தி.மு.க., வழக்கு தொடரும்.இவ்வாறு, ஸ்டாலின் கூறியுள்ளார்.கரடி துப்பிய, 'மொமன்ட்''டுவிட்டர்' பக்கத்தில், தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி கூறியிருப்பதாவது:தமிழகத்தில், 12 ஆயிரத்து, 524 கிராமங்களுக்கு, 'இன்டர்நெட்' இணைப்பு தருவதற்கான, கருவிகள் கொள்முதலுக்கான டெண்டரில் முறைகேடு என, அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியது. தி.மு.க.,வும் வழக்கு தொடர்ந்தது. முதல்வர் இ.பி.எஸ்., விளக்கத்தை ஏற்காத மத்திய அரசு, டெண்டரை ரத்து செய்துள்ளது. கரடியே காறித் துப்பிய, 'மொமன்ட்!'இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X