தொற்று தடுப்பு உபகரணம் 5,000 போலீசாருக்கு வழங்கல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொற்று தடுப்பு உபகரணம் 5,000 போலீசாருக்கு வழங்கல்

Added : ஜூன் 27, 2020
Share

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட காவல் துறையினருக்கான, நோய் தொற்று தடுப்பு உபகரணங்களை எஸ்.பி., ஜெயக்குமார் வழங்கினார்.தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள விழுப்புரம் மாவட்ட காவல் துறையைச் சேர்ந்த அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, தேவையான முகக் கவசம், கையுறை, சானிடைசர்கள் மற்றும் கிருமி நாசினி ஆகியவை வழங்கப்பட்டது.விழுப்புரம் மாவட்ட காவல்துறை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எஸ்.பி.,ஜெயக்குமார் வழங்கினார். ஏ.டி.எஸ்.பி., தேவநாதன, உடனிருந்தார்.

நிகழ்ச்சியில், மாவட்டத்தில் உள்ள 30 போலீஸ் நிலையங்கள், தலா 4 போக்குவரத்து போலீஸ் நிலையங்கள், அனைத்து மகளிர் போலீஸ் நிலையங்கள், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு நிலையங்கள் உட்பட 42 போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு, முகக் கவசம், கையுறைகள் வழங்கப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X