பொது செய்தி

தமிழ்நாடு

கலெக்டர் ஆபீஸ் ரூ.451 கோடி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சென்னை; நான்கு புதிய மாவட்டங்களுக்கு, கலெக்டர் அலுவலகங்கள் கட்ட, தமிழக அரசு, 451 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தை பிரித்து, கள்ளக்குறிச்சி; காஞ்சிபுரத்தை பிரித்து செங்கல்பட்டு; வேலுரை பிரித்து, திருப்பத்துார்; ராணிப்பேட்டை என, நான்கு மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன. இந்த நான்கு மாவட்டங்களுக்கு, கலெக்டர் அலுவலகங்கள் கட்ட, நிலம் தேர்வாகி, பொதுப்பணி துறையின் கட்டுமான வரைபடத்தை, பிப்ரவரியில் தயாரித்தனர்.

ஊரடங்கு காரணமாக, கட்டுமான பணிக்கு நிதி ஒதுக்குவது தாமதமானது.தற்போது, கள்ளக்குறிச்சிக்கு, 104.44 கோடி; செங்கல்பட்டுக்கு, 119.21 கோடி; திருப்பத்துாருக்கு, 109.71 கோடி; ராணிப்பேட்டைக்கு, 118 கோடி ரூபாய் என, நான்கு கலெக்டர் அலுவலங்கள் கட்ட, தமிழக அரசு, 451.36 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.இதற்கான அரசாணையை, கூடுதல் தலைமை செயலர், அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X