பொது செய்தி

தமிழ்நாடு

உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல...

வரலாற்று சிறப்புமிக்க குடைவரைக் கோயில்களில் முதன்மையானது பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயில். ஆன்மிக தலங்களில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது.மண விழாவா, மணி விழாவா, சங்கக் கூட்டமா, பிரசார ஆரம்பமா எல்லாமே இங்கு பிள்ளையார்சுழிபோட்டுத்தான் துவக்குகின்றனர்.
கடைகளுக்கு புதுக்கணக்கும் இங்கு எழுதுவதுண்டு.. இப்படி ஆன்மிக பக்தர்களின் வருகையால் திணறும் பிள்ளையார்பட்டி. எல்லாமே ஊரடங்குக்கு முன்பாகத்தான். இப்போது மூடப்பட்ட ராஜகோபுரவாசல், வெறிச்சோடி கிடக்கும் பக்தர்கள் நிழற்கூடம், கடை வீதிகள் பார்க்கவே மனதை நெருடச் செய்கிறது. ஆனாலும் விடாப்பிடியாக பல மைல் துாரத்திலிருந்து வாகனங்களில் வந்து கோயில் முன் நின்று சுவாமி தரிசனம் செய்யும் பக்தர்கள் வரத்தான் செய்கின்றனர். புது வாகனங்களுடன் வந்து பூஜை செய்து சிதறு தேங்காய் அடித்து வாகனத்திற்கு மாலை அணிவித்து செல்கின்றனர். மூலவரை தரிசிக்க முடியாவிட்டாலும். கோபுரத்தை தரிசித்தாலே புண்ணியம் தான் என்று பக்தர்கள் நம்பிக்கையைப் பார்க்க முடிகிறது. அவர்களின் மனக்குமுறலையும் கேட்க முடிந்தது.தரிசனத்திற்கு அனுமதித்தால் தயார்

அரசு கொரோனோ தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு அறிவித்தது முதல் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. சக அறங்காவலர்காரைக்குடி மெய்யப்பரும் சேர்ந்துகோயிலில் சுகாதாரப்பணிகள்மேம்படுத்தி கிருமிநாசினி பயன்படுத்தி கோயிலை துாய்மைப்படுத்தியும், வளாகத்தில் பராமரிப்புப் பணி களையும் மேற்கொண்டு பக்தர்களின் தரிசனத்திற்காக தயாராக உள்ளோம். தற்போதும் காலையில் 6:00 மணி முதல் 9:30 மணி வரை உச் சிகால பூஜைகளும், மாலையில் 4:00 மணி முதல் 7:30 மணி வரையிலுமாக 5 கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் வெளியே நின்று தரிசனம் செய்து செல்கின்றனர். அரசு அனுமதி அளித்தால் முழு சமூக விலகலுடன் பக்தர்கள் வழிநடத்தி விநாயகரை தரிசிக்கவைக்கலாம். எல்லாம் இறைவன் கையில் தான் உள்ளது.

அறங்காவலர் செந்தில் என்ற பழனியப்பன்

,குருவிக்கொண்டான்பட்டி

மக்களின் வாழ்க்கை வளமாக வேண்டும்

முழு முதற் கடவுள் பிள்ளையார்பட்டி விநாயகர். சங்கடஹர சதுர்த்தி, வளர்பிறை சதுர்த்தியன்று விடுபடாமல் விநாயகரைதரிசித்து விடுவேன். இது தவிர முக்கிய நாட்கள், சதுர்த்தியை முன்னிட்டு 10 நாட்களும் விநாயகரை வழிபட்டு வருவது வழக்கம். வெள்ளெருக்கு மாலை, அருகம்புல் மாலை சாற்றி வழிபாடு நடத்துவதை பழக்கமாக கொண்டுள்ளேன். ஊரடங்கால் கடந்த 3 மாதமாக அங்கு செல்ல முடியாமல் உள்ளேன். வீட்டிலேயே 'விநாயகர் அகவலை' பாடி இறைவனை துதிக்கிறேன். அவரை காண இயலாத மன வேதனையோடு தவிக்கிறேன்.

ஜி.சித்ராதேவி, சிவகங்கை
ஆனைமுகத்தோன் வழி காட்டனும்

பொங்கலுக்கு வந்து சாமி கும்பிட்டேன். ஊரடங்கால் அடிக்கடி வர முடியவில்லை. இப்போது பூட்டியிருந்தாலும் கோவிலுக்கு வந்து விட்டு செல்வோம் என்று வந்தேன்.நிம்மதியாக இருக்கிறது. சுவாமிக்கு அர்ச்சனை செய்ய முடியாவிட்டாலும் மனதில் பிரார்த்தனை செய்துகொண்டேன்.பிரசித்தி பெற்றவர், முதற்கடவுள் என்பதால் இவரை பிரார்த்திப்பது வழக்கம். மீண்டும் கோயில் திறந்து வழிபட அந்த ஆனைமுகத்தோன் தான் வழி காட்ட வேண்டும். அரசு முக்கியமான கோயில்களையாவது தரிசனத்திற்கு அனுமதிக்க வேண்டும்.

சிவபாண்டியன், கருத்தான்பட்டி

வேறு வழியில்லை

மூலக்கடவுள் விநாயகரை இங்குவழிபடுவது தனிச்சிறப்பு. மனத்திற்கு சந்தோஷத்தை தருவதுடன் பிரார்த்தனையும் நிறைவேறும். கோயில் மூடிதான்இருக்கும் என்று தெரிந்தாலும்மனது கேட்கவில்லை. கோயில் வளாகத்தில் அமர்ந்து விக்னேஷ்வரரை மனதில் இருத்தி வணங்குகிறோம். தொற்றுதவிர்க்க என்றால் வேறு வழியில்லை இதை ஏற்கத்தான் வேண்டியுள்ளது. இருந்தாலும் இந்த கஷ்டம் விரைவில் நீங்க விநாயகர்தான் அருள் புரிய வேண்டும். மக்கள் ஒத்துழைக்க வேண்டுமே.

சாந்திஜெயராமன், மானாமதுரைமூடிக்கிடப்பது குறை தான்

ஊரடங்கால் கோயில் நடை சாத்தப்பட்டிருந்தாலும், ஐந்து வாரங்களாக கோயில் தலத்தில்நின்று விநாயகரை மனதில் இருத்திவழிபட்டு செல்கிறேன். கோயில்கள்இப்படி மூடிக்கிடப்பது பெறும் குறை தான். நமது பூமியின் அடிப்படையே ஆன்மிகம் தான். இங்கு இப்படி கோயில்கள் மூடிக்கிடப்பதும், பக்தர்கள் இறைவனை நேரில் வந்து வழிபடமுடியாததும் ஏற்றுக்கொள்ள முடியாது.

சமூக விலகல் கட்டாயம் தான். அதற்காக கோயில் தலைவாசல் திறந்து வெளியிலிருந்து மூலவரை தரிசிக்கும் வாய்ப்பையாவது அரசு அளிக்கலாம்.

சேகர், புதுக்கோட்டை

மனதை தேற்றிக்கொள்ளலாம்

சொந்த ஊர் தான். அதனால் கோயில் வழியாக சென்று தலைவாசலில் நின்று கும்பிட்டு செல்வது வழக்கம். வெள்ளிக்கிழமைதோறும் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வேன். இப்போது சில மாதமாக கும்பிட முடியாதது எதையோ இழந்தது போல இருக்கிறது இருந்தாலும் ராஜகோபுரத்தை வணங்கி வாசலில் நின்று விநாயகரை பிரார்த்தனை செய்ய மனதை தேற்றிக் கொள்கிறேன். சீக்கிரம் கதவுகள் திறந்து தங்கக்கவசத்தில் விநாயகரை பார்க்கணும். அப்போது தான் முழு நிம்மதி கிடைக்கும்.

பார்த்திபன், பிள்ளையார்பட்டி

கஷ்டங்கள் விலகும்

இந்த வழியாக செல்லும் போதெல்லாம் பிள்ளையார்பட்டிக்கு வந்து விநாயகரை தரிசித்து செல்வதுண்டு. தற்போதுகோயில் மூடியுள்ளதால் நேரிடையாக தரிசனம் செய்ய முடியாதது மனதிற்கு கஷ்டமாகஉள்ளது. தவிர்க்க முடியாத காரணத்தால் தான் என்று நாம் சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. இருந்தாலும் கோயிலுக்கு வந்து கோபுர வாசலில் நின்று விநாயகரை வணங்கி விட்டே செல்கிறோம். வழிபாட்டுத் தலங்களில் கூட்டுப் பிரார்த்தனையும் இது போன்ற கஷ்டங்களை விலக்கவும், குறையவும் உதவும்.

சாய்குமார், காரைக்குடி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X