தமிழ்நாடு

கொரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதார பணிகள் 'சுறுசுறு'

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 கொரோனா தொற்று அதிகரிப்பு: சுகாதார பணிகள் 'சுறுசுறு'

திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி பகுதியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. நோய் தொற்று பரவாமல் இருக்கும் வகையில் சுகாதார பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக வெளியூர் பகுதியிலிருந்து திரும்பிய சிலருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், தொற்று நாளுக்கு நாள் கண்டறியப்பட்டு வருகிறது.நேற்றைய நிலவரப்படி சென்னையிலிருந்து திருப்பூர் வந்த பெண் எஸ்.ஐ.,க்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வீரபாண்டி, புளியங்காடு பகுதியை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் உறவினர் திருமணத்துக்கு தேனி சென்று திரும்பினர்.
இதில், கணவருக்கு தொற்று ஏற்படவில்லை.அவரது, 40 வயது மனைவி மற்றும் 20 வயது மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், நேற்று காலை அவர்கள் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.அவர்கள் வீடு உள்ள பகுதியில் ககாதார பிரிவினர் கிருமி நாசினி தெளித்து, பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X