பொது செய்தி

தமிழ்நாடு

 சிவகங்கையில் மீண்டும் கபசுர குடிநீர் வழங்கல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

பிள்ளையார்பட்டி:பிள்ளையார்பட்டியில் ஆர்.எம்.மெய்யப்பச்செட்டியார் நினைவு அறக்கட்டளை சார்பில் கோயில் பணியாளர்களுக்கு நிவாரணம் வழங்கி மாவட்ட கொரோனா தடுப்பு சிறப்பு அலுவலர்மகேசன் காசி ராஜன், கலெக்டர் ஜெயகாந்தன் கூறியதாவது:

சிவகங்கை மாவட்டத்தில் தொற்று கட்டுப்பாட்டில் உள்ளது. வெளியூர் நபர்களின் தொற்று தான் அதிகம். முதல் ஊரடங்கில் கபசுரக்குடிநீர் விநியோகம் தொற்றை கட்டுப்படுத்தியுள்ளது. தற்போதுஇரண்டாவது முறையாக கபசுரக்குடிநீர் வீடு, வீடாக கொடுக்க திட்டமிட்டுள்ளோம். சித்த மருத்துவத்துறையுடன் இணைந்து உள்ளாட்சிஅமைப்புகள் வழங்கும்.

தொற்று அதிகரித்தால் தாலுகாக்களிலும் சிகிச்சை அளிக்க 18 அரசு மருத்துவமனைகள் தயார் நிலையில் உள்ளன. மாதிரிகள் அதிகரிப்பதால் முடிவு தாமதமாகிறது.மக்கள் கூடும் இடங்கள்,தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது. 3 வீடுகளுக்கும் அதிகமாக தொற்று ஏற்பட்டால் அப்பகுதி தனிமைப்படுத்தப்படுகிறது, என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X