மானாமதுரை ராம் நகரில் அடிப்படை வசதி இல்லை| Dinamalar

மானாமதுரை ராம் நகரில் அடிப்படை வசதி இல்லை

Added : ஜூன் 27, 2020
Share
 மானாமதுரை ராம் நகரில் அடிப்படை வசதி இல்லை

மானாமதுரை:மானாமதுரை எல்லையை ஒட்டிய ராம் நகரில் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாங்குளம் ஊராட்சிக்குட்பட்ட இந்த பகுதியில் தற்போது ஏராளமான குடியிருப்புகள் உள்ளன.மேலும் பலர் புதிதாக வீடுகளை கட்டி வருகின்றனர்.ஒரு சில தெருக்களை தவிர மற்ற தெருக்களில் ரோடு, கழிவுநீர், தெருவிளக்கு போன்ற வசதிகள் இல்லாததால் சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.

அந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், தற்போது கடந்த ஒரு வருட காலமாக புதிதாக தோன்றிய தெருக்களில் எவ்வித அடிப்படை வசதியும் செய்து கொடுக்காததால் கழிவு நீர் செல்ல முடியாமலும், மழை காலங்களில் மக்கள் நடந்து செல்ல முடியாமலும் தவித்து வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X