பொது செய்தி

தமிழ்நாடு

அக்., வரை பள்ளிகள் திறப்பில்லை தனியார் பள்ளி நிர்வாகிகள் கருத்து

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சென்னை; -'பள்ளிகளை, அக்டோபர் வரை திறக்க வாய்ப்பு இல்லை' என, தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னையை சேர்ந்த, ராம்கோ நிறுவனத்தின் உறுப்பு நிறுவனமான, 'பேரன்ட் சர்க்கிள்' நிறுவனம், பள்ளி முதல்வர்களை ஒருங்கிணைத்து, 'ஆன்லைன்' வாயிலாக ஆலோசனை மற்றும் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்தியது. இதில், சென்னை, மும்பை மற்றும் டில்லியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளின் நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.

அவர்களின் கருத்துக்கள் வருமாறு:கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், பள்ளிகளை தற்போது திறக்க முடியாத சூழல் உள்ளது. அதிலும், தென்மேற்கு பருவமழை காலமாக உள்ளதால், தொற்று பரவல் அதிகரிக்கும் என்பதும், மாணவர்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது.பள்ளிகளில், மாணவர்களுக்கு இடையே, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பது சவாலான பணி. குறிப்பாக, துவக்க நிலை வகுப்புகளில், மாணவ, மாணவியர் மத்தியில், தனிமனித இடைவெளியை பின்பற்ற முடியாது.

எனவே, 'பிளே ஸ்கூல், ப்ரீ ஸ்கூல், பிரைமரி ஸ்கூல்' என, இரண்டரை வயது முதல், 10 வயது வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்த முடியாது. பாடதிட்டங்கள், பாடங்களின் அளவுகள் குறைக்கப்பட வேண்டும். கூடுதல் வகுப்பறை கட்டடங்கள் ஏற்படுத்த வேண்டும். கொரோனாவுக்கு பிந்தைய நிலைக்கான விதிகள் வகுக்கப்பட வேண்டும். கல்வி ஆண்டின் காலத்தை மாற்றி அமைக்க வேண்டும். இதுபோன்ற காரணங்களால், அக்டோபர் வரை பள்ளிகளை திறப்பது சாத்தியம் இல்லை.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.சில பள்ளியினர், ஜூலை பின்பாதி அல்லது செப்டம்பரில், பள்ளிகள் திறக்கும் எனக் கூறுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X