பொது செய்தி

தமிழ்நாடு

3 நாளுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை...

Updated : ஜூன் 27, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement
Puducherry, imd, Rain, Rainfall, Climate, Tamil Nadu, TN, TN News, Tamil Nadu News, Climate news, Districts, TN districts, India, Chennai, Weather

சென்னை : 'வெப்பச் சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம் மற்றும் புதுச்சேரில், மூன்று நாட்களுக்கு மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதேநேரத்தில், '17 மாவட்டங்களில், மழை வெளுத்து வாங்க வாய்ப்புள்ளது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.தென் மேற்கு பருவமழை, ஜூன், 1ல் கேரளாவில் துவங்கியது. இது, படிப்படியாக மற்ற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது.



முதற்கட்டமாக, கேரளா, தமிழகம், கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஒடிசா மற்றும் வடகிழக்கு மாநிலங்களில், தென்மேற்கு பருவ மழை பெய்யத் துவங்கியது. இதையடுத்து, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப் வரையிலும், மழை தீவிரம் அடைந்துள்ளது.ஒவ்வொரு ஆண்டும், ஜூலை, 8ல் தான் நாடு முழுவதும், தென்மேற்கு பருவமழை பரவும். ஆனால், இந்த ஆண்டு, 10 நாட்களுக்கு முன்னதாகவே, நாடு முழுவதும் பருவமழை பரவியுள்ளதாக, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வரும் நாட்களில், வட மாநிலங்களில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்; ஆகஸ்ட் வரை தொடர் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
இதனிடையே, தமிழகத்திலும் பருவமழை, அவ்வப்போது தீவிரம் அடைந்து வருகிறது. திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கோவை, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில், அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், இன்று முதல் மூன்று நாட்களுக்கு, 17 மாவட்டங்களில், மிதமானது முதல் கனமானது வரையிலான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.


எங்கே மழை?



சென்னை வானிலை ஆய்வு மையம், நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, விழுப்புரம், கடலுார், நாகை, காஞ்சிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களில், கடலோரத்தில் ஓரிரு இடங்களில், இன்று லேசான மழை பெய்யும்.சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கரூர், திண்டுக்கல், வேலுார், நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில், இன்று பகல் வரையில், ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி, கோவை, தேனி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில், நாளை பகல் வரையில் கனமழை பெய்யும்.
சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, வேலுார், நீலகிரி, கோவை, தேனி, திருவண்ணாமலை மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் நாளை மறுநாள் பகல் வரையில் கனமழை பெய்யும்
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று முதல் மூன்று நாட்களுக்கு, 17 மாவட்டங்களில் லேசானது முதல், கனத்த மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மழை, வெயில் நிலவரம்



இந்த ஆண்டு பருவமழையை பொறுத்தவரை, இயல்பான அளவைவிட குறைவாகவே பெய்து வருகிறது. வரும் மாதங்களில், மழை தீவிரம் அடையுமா என, பல்வேறு தரப்பிலும் எதிர்பார்க்கப்படுகிறது.நேற்று காலை, 8:30 மணி நிலவரப்படி, 24 மணி நேரத்தில், மருங்காபுரி, நத்தம், 3 செ.மீ., விராலிமலை, தஞ்சாவூர், பூதலுார், பொன்னமராவதி, 2 செ..மீ., மழை பெய்துள்ளது.

நேற்று மாலை நிலவரப்படி, பரங்கிப்பேட்டை, திருத்தணியில், 39 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது. கடலுார், மதுரை, திருச்சி, துாத்துக்குடி, தொண்டி, நாகை, 38 டிகிரி செல்ஷியஸ் வெயில் நிலவியது.

சென்னை, கரூர், சேலம், நாமக்கல், 36; பாளையங்கோட்டை, ராமநாதபுரம், 35; கோவை, 33; தர்மபுரி, 35; கன்னியாகுமரி, 32; கொடைக்கானல், 19 டிகிரி செல்ஷியஸ் வெயில் பதிவானது.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N Sankar - Tirunelveli,இந்தியா
28-ஜூன்-202021:08:31 IST Report Abuse
N Sankar சில நாட்களாக இந்த ஆள் பேசவேயில்லை. பழைய சீன ஒப்பந்தத்தை மறுக்க/ மறைக்க அவன் அவன் கிளம்பிவிட்டான். இவர்களுக்கு வேற வேலை இல்லை.
Rate this:
Cancel
N Sankar - Tirunelveli,இந்தியா
28-ஜூன்-202021:04:36 IST Report Abuse
N Sankar ரமணர் இருந்தவரை ஒரு "த்ரில்" இருந்தது. இப்பொழுது ? ....
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
28-ஜூன்-202019:40:04 IST Report Abuse
பெரிய ராசு தென்காசியில் கடுமையான வெயில் ...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X