104 தெருக்களுக்கு சென்னையில், சீல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

104 தெருக்களுக்கு சென்னையில், 'சீல்'

Added : ஜூன் 27, 2020
Share

சென்னை; சென்னையில், கொரோனா பாதிப்புள்ள, 104 தெருக்களுக்கு, 'சீல்' வைக்கப்பட்டுள்ளது.

சென்னையில், ஒரு தெருவில், ஐந்து வீடுகளுக்கு மேல், கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டால், அத்தெருவை மூடி, மாநகராட்சி, 'சீல்' வைத்து வருகிறது. அதன்படி, 1,500க்கும் மேற்பட்ட தெருக்கள், 'சீல்' வைக்கப்பட்டு இருந்தன. தொடர்ந்து, அத்தெருக்களில், 14 நாட்கள் தொற்று கண்டறியப்படாவிட்டால், அத்தெருக்களை, மாநகராட்சி விடுவித்து வருகிறது. அதன்படி, பெரும்பாலான தெருக்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. சில தினங்களுக்கு முன், 64 தெருக்கள் மட்டுமே, பாதிப்பு உள்ளவையாக இருந்தன.

இந்நிலையில், சென்னையில் பரவலாக தொற்று அதிகரித்து வருவதால், 104 தெருக்களுக்கு, மாநகராட்சி, சீல் வைத்துள்ளது. தண்டையார்பேட்டை மண்டலத்தில், 50 தெருக்கள்; கோடம்பாக்கம், 11 தெருக்கள்; வளசரவாக்கம், 10; அம்பத்துார், 9 தெருக்கள்; அண்ணாநகர், தேனாம்பேட்டை தலா, 8 தெருக்கள், சீல் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சோழிங்கநல்லுார் மண்டலத்தில், நான்கு தெருக்கள்; திரு.வி.க., நகர் மண்டலத்தில், மூன்று; அடையாறு மண்டலத்தில், ஒரு தெரு என, 104 தெருக்களுக்கு மாநகராட்சி சீல் வைத்துள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X