பொது செய்தி

தமிழ்நாடு

நொய்யல் வடிநிலத்தில் திட்டப்பணி: பணியாட்கள் இல்லாமல் தொய்வு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:நொய்யல் வடிநிலத்தில், விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், போதிய பணியாட்கள் இல்லாத காரணத்தால், திட்டப் பணிகளை செயல்படுத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.காவிரி வடிநிலத்தின் கிளை ஆறாக விளங்கும் நொய்யலை மீட்டெடுக்க, அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் மாவட்டங்களின் வழியாக செல்லும் நொய்யல் ஆற்றை விரிவாக்குதல், புனரமைத்தல் மற்றும் நவீனமயமாக்கல் பணிக்கு, 230 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.நொய்யல் ஆற்றில் நேரடியாக கழிவுகள் கலப்பதை தடுக்க அந்தந்த மாவட்ட நிர்வாகமும், மாநகராட்சியும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் போது, நிலத்தடி நீர் அதிகரித்து, நொய்யல் மீண்டும் உயிர்பெறும் என்பதால், புனரமைக்கும் பணியை நேரடியாக கண்காணிக்க ஒரு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. அவ்வகையில், திருப்பூரில், மண்ணரை மூளி குளத்துக்கு தண்ணீர் எடுத்து செல்லும் வழங்கு வாய்க்காலில், ஆக்கிரமிப்பு அகற்றும் பணி துவங்கியுள்ளது.இதேபோல், சாமளாபுரம், பள்ளபாளையம், ஆண்டிபாளையம் குளத்துக்கான வழங்கு கால்வாய்களை, புனரமைக்கும் பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது. ஆனால், கொரோனா பரவல், பணியாட்கள் இல்லாமை போன்ற காரணங்களால், புனரமைத்தல் பணிகள் தடைபட்டுள்ளன.பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'திருப்பூரில், அதிகளவில் வட மாநில தொழிலாளர்கள், பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தனர். தற்போது, பலரும், சொந்த ஊர் சென்று விட்டனர். தற்போது, பணிக்கு ஆள் கிடைப்பதில்லை. இதன் காரணமாகவே, திட்டப்பணிகளை துவக்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X