சாலைக்கிராமத்தில் பருத்தி விலை சரிவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
சாலைக்கிராமம்:இளையான்குடியில் சாலைக்கிராமம், சூராணம்பகுதிகளில் பருத்தி விலை கிலோ 1க்கு ரூ.10 குறைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, சாலைக்கிராமம்,சூராணம் பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.இந்த வருடம் நெல் அறுவடைக்கு பின்பு நடவு செய்யப்பட்ட பருத்தி விதைகள் அதிக மகசூலை

சாலைக்கிராமம்:இளையான்குடியில் சாலைக்கிராமம், சூராணம்பகுதிகளில் பருத்தி விலை கிலோ 1க்கு ரூ.10 குறைந்ததால் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

சிவகங்கை மாவட்டத்தில் இளையான்குடி, சாலைக்கிராமம்,சூராணம் பகுதிகளில் நெல், மிளகாய்க்கு அடுத்தபடியாக பருத்தி அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.இந்த வருடம் நெல் அறுவடைக்கு பின்பு நடவு செய்யப்பட்ட பருத்தி விதைகள் அதிக மகசூலை தந்தாலும் கடந்த 2 மாதங்களாக அதிகபட்சமாக கிலோ 1 க்கு ரூ.35 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்பட்டு வந்தது.

கடந்த 2 நாட்களாக இளையான்குடி, சாலைக்கிராமம் ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் விலை சரிந்து கிலோ ரூ.25க்கு பருத்தியை விவசாயிகளிடமிருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து வருகின்றனர்.விவசாயிகள் கூறுகையில், கடந்த 3 மாதங்களாக ஊரடங்கு மற்றும் போக்குவரத்து முடங்கிய நிலையில், ஏற்கெனவே பருத்திக்கு உரிய விலை இல்லாமல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில்தற்போது மழையை காரணம் காட்டி ரூ.25க்கு கொள்முதல் செய்யப்படுவது விவசாயிகளை கொரோனா காலத்தில் மேலும் கவலையில் ஆழ்த்தியுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X