பொது செய்தி

தமிழ்நாடு

உலக சாதனைக்காக பின்னோக்கி நடைபயணம் சிவகங்கையில் துவக்கம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 உலக சாதனைக்காக பின்னோக்கி நடைபயணம்  சிவகங்கையில் துவக்கம்

சிவகங்கை:கொரோனா விழிப்புணர்வு உலக சாதனை முயற்சியாக சிவகங்கையில் இருந்து ஆயிரம் கி.மீ.,பின்னால் நடந்து சென்று ராணுவ வீரர் சாதனை முயற்சியை துவக்கினார்.

சிவகங்கையில் வைகை பட்டாள ராணுவ வீரர்கள் என்ற அமைப்பை ஏற்படுத்தி, பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். கொரோனா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், இந்த அமைப்பை சேர்ந்த பாலமுருகன் என்பவர் ஆயிரம் கி.மீ., பின்னால் நோக்கியே நடந்து சென்று உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சிவகங்கையில் கலெக்டர் ஜெயகாந்தன் இவரது பயணத்தை துவக்கி வைத்தார். கோட்டாட்சியர் சிந்து, தாசில்தார் மைலாவதி, சோழன் உலக சாதனை புத்தக நிறுவனர் நிமலன் நீலமேகம், வங்கி அதிகாரி ஓய்வு அனந்தராமன் பங்கேற்றனர்.இவர் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பின்னோக்கி நடந்து சென்று, விழிப்புணர்வு நோட்டீஸ்வழங்கி வருகிறார். அவருடன் வைகை பட்டாளம் குரூப்பை சேர்ந்த ராணுவ வீரர்கள் சிலரும் செல்கின்றனர்.

இவர் ஏற்கனவே 150 கி.மீ., பின்னோக்கி நடந்து செல்லுதல், கொட்டு மழையில் சிவகங்கை விளையாட்டு மைதானத்தை சுற்றி வருதல் போன்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X