பொது செய்தி

தமிழ்நாடு

பறக்கும் படை ஆய்வு: அபராதம் விதித்து அதிரடி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 பறக்கும் படை ஆய்வு: அபராதம் விதித்து அதிரடி

திருப்பூர்:கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையில், பறக்கும் படையினர் தீவிரமாக களம் இறங்கி ஆய்வு செய்து வருகின்றனர்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள நான்கு மண்டலங்களிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கை கண்காணிக்கும் வகையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது.நான்காம் மண்டல பறக்கும் படையினர், காலேஜ் ரோடு பகுதியில் உள்ள பனியன் நிறுவனங்கள், கடைகளில் நேற்று ஆய்வு செய்தனர். மூன்றாம் மண்டல பறக்கும் படையினர் தாராபுரம் ரோட்டில் ஆய்வு செய்தனர்.அதில், முக கவசம் இன்றி ஊழியர்கள் பணியாற்றிய கடைகளுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அதே போல் முக கவசம் அணியாமல் ரோட்டில் சென்றவர்களுக்கு, 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு, ஒரு முக கவசமும் கொடுத்து அறிவுறுத்தி அனுப்புகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X