சம்பவம் செய்தி

தமிழ்நாடு

'டிவி' ஒளிப்பதிவாளர் மரணம்

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
 'டிவி' ஒளிப்பதிவாளர் மரணம்

சென்னை; கொரோனா பாதிப்பால், ராஜ், 'டிவி' ஒளிப்பதிவாளர் வேல்முருகன், 41 உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு, 5 லட்சம் ரூபாய், நிவாரண நிதி வழங்க, முதல்வர் இ.பி.எஸ்., உத்தரவிட்டுள்ளார்.

சென்னை, திருமுல்லைவாயலை சேர்ந்தவர் வேல்முருகன், 41. இவர், ராஜ், 'டிவி'யில், ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்தார். 'வென்டிலேட்டர்' கொரோனா உச்சத்தில் உள்ள நிலையில், மக்களுக்கு செய்திகளை காட்சியாக கொடுக்கும் பணியில், தீவிரமாக ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர், 14ம் தேதி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 'வென்டிலேட்டர்' உதவியுடன் சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.உயிரிழந்த வேல்முருகன், 'தமிழன், மக்கள்' தொலைகாட்சிகளிலும் பணியாற்றி உள்ளார். இவரது மனைவி, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், ஒப்பந்த செவிலியராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு, 12 வயதில் மகன் உள்ளார்.

முதல்வர் இ.பி.எஸ்., அறிக்கை: ராஜ், 'டிவி' செய்திப்பிரிவில், ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வந்த வேல்முருகன், கொேரானாவால் பாதிக்கப்பட்டு, இறந்த செய்தி அறிந்து, மிகுந்த வேதனை அடைந்தேன்.இழப்பீடுபத்திரிகை மற்றும் ஊடகங்களில் பணிபுரியும், அரசால் அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களுக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டால், அவர்களுக்கான மருத்துவ செலவை அரசு ஏற்கும். எதிர்பாராதவிதமாக இறப்பு ஏற்பட்டால், அவர்களின் வாரிசுதாரருக்கு, 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என, அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில், ஒளிப்பதிவாளர் வேல்முருகன் குடும்பத்திற்கு, முதல்வர் நிவாரண நிதியிலிருந்து, 5 லட்சம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளேன். அவரது குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த இரங்கல்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.செய்தித்துறை அமைச்சர் ராஜு இரங்கல் தெரிவித்துள்ளதோடு, வேல்முருகன் குடும்பத்திற்கு, 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளார். வேல்முருகன் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Rangarajan - Tiruchengode,இந்தியா
28-ஜூன்-202007:56:37 IST Report Abuse
Srinivasan Rangarajan முதலில் முதியவர்களுக்குதான் ஆபத்து அதிகம் என்றார்கள் ...இப்போது இளஞர்களும் அதிகம் இறக்கிறார்கள்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X