சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகள் அடைப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்புவனம்:திருப்புவனம் தாலுகாவில் மூன்று டாஸ்மாக் கடைகளை அடைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

திருப்புவனம் தாலுகாவில் புலியூர், கலியாந்துார்,வன்னிகோட்டை, திருமாஞ்சோலை, இந்திராநகர் ஒத்தவீடு, பழையனுார் உள்ளிட்ட ஏழு இடங்களில் அரசு மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் புலியூர் டாஸ்மாக் கடை மதுரை மாவட்ட எல்லையில் அமைந்துள்ளது.

முழு ஊரடங்கு காரணமாக மதுரை மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டதால் குடி மகன்கள் பலரும் புலியூர் கடைக்கு வருகின்றனர்.மது வாங்க நீண்டவரிசையில் நிற்பதால் கொரானோ வைரஸ் பரவ வாய்ப்புள்ளதாக கருதி புலியூர், கலியாந்துார், வன்னிகோட்டை ஆகிய மூன்று இடங்களில் செயல்பட்டு வரும் கடைகளை தற்காலிகமாக மூட சிவகங்கை மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டதையடுத்து நேற்று கடைகள் திறக்கப்படவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X