எல்லை தாண்டும் குடிமகன்கள் கொரோனா   பரவும் அபாயம்| Dinamalar

எல்லை தாண்டும் குடிமகன்கள் கொரோனா   பரவும் அபாயம்

Added : ஜூன் 27, 2020
Share
 எல்லை தாண்டும் குடிமகன்கள்  கொரோனா   பரவும் அபாயம்

திருப்புவனம்:திருப்புவனத்தை அடுத்த வேளாங்குளம் அரசு டாஸ்மாக் கடையில் சரக்கு வாங்க மதுரை மாவட்ட குடிமகன்கள் வருவதால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில்வெகு வேகமாக கொரோனா வைரஸ் பரவி வருவதால் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. எல்லையோரத்தில் உள்ள புலியூர் டாஸ்மாக் கடைக்கு சரக்கு வாங்க இருநாட்களில் ஏராளமானோர் குவிந்தனர். திருப்புவனத்தில் உள்ள புலியூர் உள்ளிட்ட மூன்று கடைகள் அடைக்கப்பட்டன. இதனால் குடிமகன்கள் நான்கு வழிச்சாலையில் வேளாங்குளம் அருகே உள்ள கடையில்சரக்கு வாங்க வருகின்றனர்.

மதுரை மாவட்டத்தில் இருந்து கட்டுப்பாடுகள் இன்றி இவர்கள் வருவதால் திருப்புவனத்தில் கொரானோ வைரஸ் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.எல்லைகளில் போதிய சோதனை இல்லாததால் குடிமகன்கள் எல்லை தாண்டி சமூக இடைவெளியின்றி மது பாட்டில்கள் வாங்க வந்து செல்கின்றனர். எனவே சிவகங்கை மாவட்ட டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அறிவிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X