பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பாதிப்பு, குணமடைந்தோர்,

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

சென்னை; தமிழகத்தில், நேற்று ஒரே நாளில், 3,713 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலம் முழுதும், 78 ஆயிரத்து, 335 பேர் பாதிக்கப்பட்டதில், 44 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்; 1,025 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இது குறித்து, சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் தற்போது, 33 ஆயிரத்து, 213 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும், 34 ஆயிரத்து, 805 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில், 3,713 பேருக்கு தொற்று உறுதியானது.இவர்களில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், 89 பேர். சென்னையில், 1,939 பேர்; செங்கல்பட்டில், 248 பேர்; மதுரையில், 218 பேர்;திருவள்ளூரில், 146 பேர்; திருவண்ணாமலையில், 110 பேர்; வேலுாரில், 118 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை தவிர்த்து, அனைத்து மாவட்டங்களிலும், நேற்று கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.இதுவரை மொத்தம், 10.77 லட்சம் பேருக்கு நடந்த பரிசோதனையில், 78 ஆயிரத்து, 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும், 51 ஆயிரத்து, 699 பேர் பாதிப்புக்கு ஆளாகிஉள்ளனர். செங்கல்பட்டில், 4,911 பேர்; காஞ்சிபுரத்தில், 1,683 பேர்; மதுரையில், 1,703 பேர்; திருவள்ளூரில், 3,420 பேர்; திருவண்ணாமலையில், 1,624 பேர்; வேலுாரில், 1,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில், 1,000த்துக்கும் குறைவான எண்ணிக்கையில் பாதிப்பு உள்ளது.மேலும், 12 வயதுக்கு உட்பட்ட, 3,796 சிறார்கள்; 60 வயதுக்கு மேற்பட்ட, 9,326 முதியவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.68 பேர் பலிஇதுவரை இல்லாத அளவில், நேற்று ஒரே நாளில், 2,737 பேர் சிகிச்சை முடிந்து, வீடு திரும்பினர்.

இதுவரை, 44 ஆயிரத்து, 94 பேர் குணமடைந்து உள்ளனர்.சில தினங்களில் உயிரிழந்தவர்களில், 68 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மட்டும், 46 பேர் இறந்துள்ளனர். கொரோனாவால் இதுவரை, 1,025 பேர் இறந்துள்ளனர்.சென்னையில், 776 பேர்; செங்கல்பட்டில், 75 பேர்; திருவள்ளூரில், 58 பேர்; மதுரையில், 20 பேர்; காஞ்சிபுரத்தில், 18 பேர்; விழுப்புரத்தில், 13 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.மாவட்டங்களில் பாதிப்பு நிலவரம்மாவட்டம் பாதிப்பு குணம் அடைந்தோர் இறப்புஅரியலுார் 458 394 0செங்கல்பட்டு 4,911 2,589 75சென்னை 51,699 31,045 776கோவை 428 177 1கடலுார் 940 557 5தர்மபுரி 61 19 0திண்டுக்கல் 369 231 5ஈரோடு 112 74 3கள்ளக்குறிச்சி 552 346 1காஞ்சிபுரம் 1,683 755 18கன்னியாகுமரி 304 128 1கரூர் 136 100 0கிருஷ்ணகிரி 115 32 2மதுரை 1,703 548 20நாகை 249 82 0நாமக்கல் 95 86 1நீலகிரி 66 22 0பெரம்பலுார் 161 146 0புதுக்கோட்டை 131 42 2ராமநாதபுரம் 648 176 4ராணிப்பேட்டை 719 363 2சேலம் 604 238 2சிவகங்கை 157 61 2தென்காசி 303 111 0தஞ்சாவூர் 396 169 1தேனி 513 147 2திருப்பத்துார் 115 45 0திருவள்ளூர் 3,420 2,031 58திருவண்ணாமலை 1,624 616 9திருவாரூர் 341 139 0துாத்துக்குடி 832 536 4திருநெல்வேலி 723 513 5திருப்பூர் 147 117 0திருச்சி 503 199 4வேலுார் 1,011 193 3விழுப்புரம் 765 452 13விருதுநகர் 313 170 5வெளிநாட்டில் இருந்து வந்தோர் 358 151 1உள்நாட்டு விமான பயணியர் 267 75 0ரயிலில் பயணியர் 403 219 0மொத்தம் 78,335 44,094 1,025/***

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X