பொது செய்தி

தமிழ்நாடு

ரூ.50 இருப்பு தொகை தபால் துறை திட்டம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:தபால் சேமிப்பு கணக்கின் குறைந்தபட்ச இருப்புத்தொகையை, 50 ரூபாயாக குறைக்க தபால்துறை திட்டமிட்டுள்ளது.வங்கிகளில் சேமிப்பு கணக்கின் தன்மைக்கு ஏற்ப, 5 ஆயிரம் ரூபாய் வரை குறைந்தபட்ச இருப்பு இருக்க வேண்டும். ஆனால், தபால் வங்கியில், சேமிப்பு கணக்கு துவங்க, 50 ரூபாய் இருப்பு வைத்தால் போதும். இதனால், ஆரம்பத்தில் தபால் சேமிப்பு கணக்கு துவங்க பலரும் ஆர்வம் காட்டி வந்தனர். கடந்த நான்கு மாதங்களுக்கு முன் இருப்பு தொகையை, 500 ரூபாயாக தபால்துறை உயர்த்தியது.இதுகுறித்து தபால்துறை அதிகாரிகள் கூறியதாவது:குறைந்தபட்ச இருப்பு தொகையை, 500 ரூபாயாக அதிகரித்ததும், புதிதாக இணையும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலும், கொரோனாவால் பலரும் பொருளாதார சிக்கலில் உள்ளனர். ஏற்கனவே கணக்கு துவங்கியவர்களிடமும், 500 ரூபாய் தொகை பெற முடிவதில்லை.இதுகுறித்து துறை அதிகாரிகள், வாடிக்கையாளர்களிடம் தபால்துறை கருத்துக்கணிப்பு நடத்தியது. இதன் அடிப்படையில், இருப்புத்தொகையை, 50 ரூபாயாக குறைக்க, தபால்துறை திட்டமிட்டுள்ளது, விரைவில் அறிவிப்பு வெளியாகும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X