தொடர்ந்து குறையும் வத்தல், உளுந்து விலை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தொடர்ந்து குறையும் வத்தல், உளுந்து விலை

Added : ஜூன் 27, 2020
Share

விருதுநகர்; விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல், உளுந்து விலை குறைந்துள்ளது.கடலை எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.70 குறைந்து ரூ.2580, நல்லெண்ணெய் ரூ.3900, சன்பிளவர் எண்ணெய் ரூ.1310, பாமாயில் ரூ.60 அதிகரித்து ரூ.1370க்கு விற்கப்படுகிறது. 100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.100 குறைந்து ரூ.4900, 100 கிலோ சர்க்கரை ரூ.60 அதிகரித்து ரூ.3760,மைதா 90 கிலோ பை ரூ.100 அதிகரித்து ரூ.3310, 55 கிலோ பொரிகடலை ரூ.200 அதிகரித்து ரூ.3600, 100 கிலோ துவரம் பருப்பு புதுசு நாடு ரூ.7900, 100 கிலோ நயம் புதுசு லயன் ரூ.100 குறைந்து ரூ.8500, நாட்டு உளுந்து 100 கிலோ ரூ.900 குறைந்து ரூ.7200, உளுந்து லயன் ரூ.900 குறைந்து ரூ.7200க்கும் விற்கப்படுகிறது.மசூர் பருப்பு பருவட்டு ரூ.100 குறைந்து ரூ.7300, உருட்டு உளுந்து நாடு வகை ரூ.10,000, பர்மா வகை ரூ.100 குறைந்து ரூ.7900, 100 கிலோ தொலி உளுந்தம்பருப்பு நாடு வகை ரூ.100 குறைந்து ரூ.7900க்கு விற்கப்படுகிறது. பாசிப்பருப்பு 100கிலோ 9300, ஒரு குவிண்டால் முண்டு வத்தல் ரூ.9000 முதல் ரூ.10,000, பொடி வகை ரூ.7000 முதல் ரூ.8000, ஆந்திரா ஏ.சி., வத்தல் ரூ.1000 குறைந்து ரூ.11,000 முதல் 12,500க்கு விற்கப்படுகிறது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X