அரசியல் செய்தி

தமிழ்நாடு

நிபந்தனைகளுடன் மறுடெண்டர்: அமைச்சர் உதயகுமார் திட்டவட்டம்

Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement

மதுரை; ''பாரத்நெட் திட்டத்திற்கு, மத்திய அரசு விதித்துள்ள நிபந்தனைகளை உள்ளடக்கி, புது நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு மறுடெண்டர் கோரப்படும்,'' என, வருவாய்துறை அமைச்சர், உதயகுமார் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது:கிராமங்களுக்கு தகவல் தொழில்நுட்ப வசதி கிடைக்க, பாரத்நெட் திட்டத்திற்கு, 'இ - டெண்டர்' வெளிப்படை தன்மையுடன் கோரப்பட்டது. திட்டத்தில், சில நிபந்தனைகள் திருத்தப்பட்டு, முன் அனுபவம் உள்ளவர்கள் டெண்டர் கோர வழி செய்யப்பட்டது. பாரத் நெட் திட்டத்தால், குக்கிராமங்களில் இணையதள வசதி கிடைத்து விடும்.

மத்திய அரசு, மறுடெண்டர் கோர வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. 'மேக் இன் இந்தியா' வாயிலாக, உள்நாட்டில் உள்ளவர்கள் திட்டங்கள் கிடைக்க பெற்று, சுயசார்பு நாடு உருவாக, மத்திய அரசு முயற்சி எடுத்துள்ளது. அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்குகிற திட்டங்களில், மேக் இன் இந்தியா முறைகளை உள்ளடக்கிய நிபந்தனைகளை கொண்டு வர, அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. திட்ட இயக்குனர்கள் கூடி, மத்திய அரசு நிபந்தனைகளை உள்ளடக்கி, புதிய நிபந்தனைகள் உருவாக்கப்பட்டு, இத்திட்டம் மறு டெண்டர் கோரப்படும். தகுதியுள்ளவர்களை தேர்வு செய்து விரைவில் திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-ஜூன்-202023:14:44 IST Report Abuse
தமிழ்வேல் எப்புடி சிரிக்கிறதுன்னு தெரியல // திட்டத்தில், சில நிபந்தனைகள் திருத்தப்பட்டு, முன் அனுபவம் உள்ளவர்கள் டெண்டர் கோர வழி செய்யப்பட்டது. //
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X