தமிழ்நாடு

நமக்கு நாமே பொறுப்பு! கொரோனா தொற்று பரவ அதிகம் வாய்ப்பு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:கொரோனா தொற்று பரவ அதிகம் வாய்ப்பு உள்ளதால், கவனமாக இருக்க வேண்டும். என மருத்துவ துறையினர் தொடர்ந்து எச்சரிக்கின்றனர். இதனால், திருமணம் உட்பட நிகழ்ச்சிக்கு செல்வதை ஒத்திவைப்பது அவசியமாகி உள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், மே 2க்கு பின், கொரோனா தொற்று பரவாமல் இருந்தது. அதன்பின், சென்னையில் இருந்து இறக்குமதியாகி விட்டது. இதுவரை, 15க்கும் மேற்பட்டவர்கள், வெளிமாவட்ட பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
நேற்று காலை நிலவரப்படி, 141 நபர்களுக்கு தொற்று உறுதியானது. நேற்று மட்டுமே, 11 நபர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. நெருங்கிய உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு. கரூர், திண்டுக்கல், சென்னை, கோவை மாவட்டங்களுக்கு சென்று வந்தவர்கள், அதிக அளவு கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர்.அடுத்ததாக, மருத்துவ பணிக்காக சென்று வந்தவர்களையும், கொரோனா தொற்றி விட்டது.
சென்னையில் இருந்து வந்த, பெண் சப் இன்ஸ்பெக்டர், தென்னம்பாளையம், கல்லாங்காடு பகுதிகளை சேர்ந்த சிலருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியாகி, கோவை இ.எஸ்.ஐ., மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர்.உடுமலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு நேற்று தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா தொற்று பாதித்தவர் பயண விவரத்தை பார்க்கும் போது, வெளிமாவட்டங்களில் நடந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தது உறுதியாகியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, போலீஸ் வட்டத்தில், சரியான ஒருங்கிணைப்பு இல்லை. குறிப்பாக, மாவட்ட எல்லையில், கண்காணிப்பு பலமாக இல்லாததால், பலரும் உள்ளே வருகின்றனர்; வெளியேயும் செல்கின்றனர். நோய் தடுப்பு வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை.
தற்போது, கொரோனா உச்சத்தை நெருங்கிவிட்டதால், ஒவ்வொரு நபரும், முடிந்தவரை வீட்டிலேயே இருக்க வேண்டும். அத்தியாவசிய தேவை இருந்தால் மட்டும், முககவசம் அணிந்து வெளியே வர வேண்டும். இது, ஊரடங்கு நேரம் என்பதை உணர்ந்து, திருமணம் மற்றும் துக்க நிகழ்வுகளில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும்.பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி, வீட்டிலேயே இருக்க வேண்டும். அதாவது, ஒவ்வொரு நபரும் கடுமையான சுய ஊரடங்கு அவசியமாகியுள்ளதாக, மருத்துவ பணிகள் துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X