அரசியல் செய்தி

தமிழ்நாடு

உயிர் காக்கும் மருந்துகள் கொள்முதல்: விஜயபாஸ்கர்

Updated : ஜூன் 29, 2020 | Added : ஜூன் 27, 2020 | கருத்துகள் (5)
Share
Advertisement
உயிர் காக்கும் மருந்துகள் கொள்முதல்: விஜயபாஸ்கர்

சென்னை: 'கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளி களுக்கு, சிகிச்சை அளிக்கும் நோக்கத்தோடு, உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன' என, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, 1,769 டாக்டர்கள் உட்பட, 14 ஆயிரத்து, 814 மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர். நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு, உயர் தர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
எனவே, உயிர் காக்கும் விலை உயர்ந்த ஊசி மருந்துகளை தருவித்து பயன்படுத்த, முதல்வர் உத்தரவிட்டு உள்ளார்.தமிழக மருத்துவ பணிகள் சேவை கழகம் வாயிலாக, 'டோசிலிசுமாப்' - 400 மி.கி., அளவில், 1,200 குப்பிகள்; 'ரெம்டேசிவிர்' - 100 மி.கி., அளவில், 42 ஆயிரத்து, 500 குப்பிகள் வாங்கப்படுகின்றன.

'ஏனாக்ஸாபரின்' - 40 மி.கி., அளவில், ஒரு லட்சம் குப்பிகள் ஊசி மருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில், ஏற்கனவே, டோசிலிசுமாப், 1,000 குப்பிகள், ரெம்டேசிவிர், 1,100 குப்பிகள்; ஏனாக்ஸாபரின், ஒரு லட்சம் பெறப்பட்டுள்ளன; மீதமுள்ளவை, ஓரிரு நாட்களில் வந்தடையும்.இந்த உயிர் காக்கும் ஊசி மருந்துகள், மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
28-ஜூன்-202023:17:31 IST Report Abuse
தமிழ்வேல் 1200 குப்பிகள் யாருக்கு ? நிச்சயமா 10 கோடி ஏழைகளுக்கு மட்டுமா இருக்கும்.
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
28-ஜூன்-202009:28:44 IST Report Abuse
Ellamman இந்த டெண்டரும் மத்திய அரசு தலையிட்டு ரத்து செய்துவிடும் நிலையில் நடந்துகொள்ளாதீர்... ஏனெனில் உங்கள் reputation அப்படி...
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
28-ஜூன்-202007:39:39 IST Report Abuse
RajanRajan கேக்குறது எதோ நல்லா தான் இருக்கு. ஆனா ஆங்காங்கே உள்ள இடை தரகு வித்தைகளை நினைத்தால் குரானாவே பரவாயில்லை எனும் எண்ணமும் கூடவே வருது குட்க்கா மாஸ்டரே. இப்பவாச்சும் நல்ல காரியம் பண்ணினா சரிதான்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X