மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மனைவியை எரித்து கொன்ற கணவர் கைது

Added : ஜூன் 27, 2020
Share

வேலுார்; மனைவி மீது பெட்ரோல் ஊற்றி, எரித்துக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார். திருப்பத்துாரை சேர்ந்தவர் சேஷாசலம், 65; நகை அடகுக்கடை ஊழியர்; இவரது மனைவி மல்லிகா, 60. தம்பதிக்கு இரண்டு மகள்கள், மகன் உள்ளனர். மூவருக்கும் திருமணமாகி விட்டது. தம்பதியர் தனியாக வசித்து வந்தனர்.பத்து ஆண்டுகளுக்கு முன், உடலில் வெண் தழும்பு நோயால், சேஷாசலம் பாதிக்கப்பட்டார். அவரை மல்லிகா சரியாக கவனிக்கவில்லை என, தெரிகிறது. இதுதொடர்பாக, கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு இருவரும் துாங்கச் சென்றனர். நல்ல உறக்கத்தில் இருந்த மல்லிகா மீது, நள்ளிரவில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார், சேஷாசலம். இதனால், உடல் முழுதும் தீ பரவிய மல்லிகா, துடி துடித்து இறந்தார். திருப்பத்துார் நகர போலீசார், உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்; சேஷாசலத்தை கைது செய்தனர்.

போலீசாரிடம் சேஷாசலம் அளித்த வாக்குமூலத்தில், 'திருமணமாகி, 40 ஆண்டுகளாகிறது. எனக்கு வெண் தழும்பு ஏற்பட்ட பிறகு, என் மனைவி, என்னை வெறுப்பாகவே பார்த்தாள். மன உளைச்சலுக்கு ஆளாகி, மனைவியை கொன்று விட்டேன்' என, தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X