சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.ஐ., மனைவிக்கு தொற்று போலீஸ் ஸ்டேஷன் மூடல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 எஸ்.ஐ., மனைவிக்கு தொற்று போலீஸ் ஸ்டேஷன் மூடல்

திருப்பூர்; சென்னையில் இருந்து திருப்பூர் வந்த பெண் எஸ்.ஐ.,க்கு கொரோனா உறுதியானதால், அவர் கணவர் பணியாற்றி வரும், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது.

திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ஒருவர், போலீஸ் குடியிருப்பில் வசிக்கிறார். இவரது மனைவி சென்னையில், எஸ்.ஐ., யாக உள்ளார்; அவர், 24ம் தேதி, சென்னையில் இருந்து திருப்பூர் வந்தார். மருத்துவ பரிசோதனையில், அவருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால், திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அத்துடன், அவரது வீட்டில் கணவர், மகள், மாமனார், மாமியார் ஆகியோருக்கும் பரிசோதனை செய்யப்பட்டு தனிமைப்படுத்தப் பட்டனர். போலீஸ் குடியிருப்பு, 'பேரிகார்டு' வைத்து, 'சீல்' வைக்கப்பட்டது. பெண் எஸ்.ஐ., கணவர் பணியாற்றி வரும் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டது. அனைத்து பகுதிகளிலும், கிருமி நாசினி அடிக்கப்பட்டு சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X