பொது செய்தி

தமிழ்நாடு

2 நாளில் முடியும் ஜமாபந்தி: நேரடியாக மனு வாங்க தடை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:நடப்பு ஆண்டில், கொரோனா தொற்று தடுப்பு பணி இருப்பதால், 29 (நாளை) மற்றும் 30 ஆகிய இருநாட்களில் ஜமாபந்தி நிறைவு பெறுகிறது.பல்லடத்தில், கலெக்டர் விஜயகார்த்திகேயன் தலைமையில் ஜமாபந்தி நடக்கிறது; நாளை பல்லடம் மற்றும் கரடிவாவி பிர்கா; 30ம் தேதி சாமளாபுரம், பொங்கலுார் பிர்காக்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.திருப்பூர் தெற்கில், டி.ஆர்.ஓ., சரவணமூர்த்தி தலைமையில், திருப்பூர் தெற்கு மற்றும் நல்லுாருக்கு, நாளையும், தெற்கு அவிநாசிபாளையத்துக்கு, 30ம் தேதியும் நடக்கிறது.காங்கயத்தில், தாராபுரம் சப்- கலெக்டர் பவன்குமார் தலைமையில், நாளை காங்கயம் மற்றும் ஊதியர்; 30ம் தேதி நத்தக்காடையூர், வெள்ளகோவில் பிர்காக்கள்; அவிநாசியில், மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையில், சேவூர், அவிநாசி தெற்கில் நாளையும், அவிநாசி கிழக்கு, பெருமாநல்லுாருக்கு, 30ம் தேதியும் நடக்கிறது.திருப்பூர் வடக்கில், ஆர்.டி.ஓ., கவிதா தலைமையில், நாளை ஒரே நாளில், ஏழு வருவாய் கிராமங்களுக்கும் ஜமாபந்தி நடக்கிறது. உடுமலையில், ஆர்.டி.ஓ., தலைமையில், நாளை உடுமலை, குறிச்சிக்கோட்டை, பெரியவாளவாடி பிர்காக்களுக்கும், 30ம் தேதி குடிமங்கலம், பெதப்பம்பட்டி பிர்காக்களுக்கும் நடக்கிறது.ஊத்துக்குளியில், நேர்முக உதவியாளர் (நிலம்) தலைமையில், குன்னத்துாருக்கும், 30ம் தேதி ஊத்துக்குளிக்கும் ஜமாபந்தி நடக்கிறது. மடத்துக்குளத்தில், நாளை ஒரே நாளில், துங்காவி, மடத்துக்குளம் பிர்காக்களுக்கு ஜமாபந்தி நடக்கிறது.வருவாய்த்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஜமாபந்தி மனுக்களை, நேரடியாக பெறக்கூடாது; 'ஆன்லைன்' மூலமாக பதிவு செய்துள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜமாபந்தியில் பங்கேற்கும் அதிகாரிகள், வி.ஏ.ஓ.,கள் மற்றும் கிராம உதவியாளர்கள், 'சானிடைசர்' மூலம் கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும். கட்டாயம் முககவசம் அணிந்து பணியாற்ற வேண்டும்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X