பொது செய்தி

தமிழ்நாடு

கர்நாடகா சென்று திரும்ப தொழிலாளர்களுக்கு தடை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

ஓசூர்; ஓசூரில், கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், பணிக்காக கர்நாடகா சென்று திரும்ப, தொழிலாளர்களுக்கு நேற்றுமுதல், அனுமதி மறுக்கப்பட்டது.தமிழக எல்லையான, ஓசூர் ஜூஜூவாடியில், கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

பிற மாநிலங்களில் இருந்து, 'இ - பாஸ்' அனுமதியுடன் வரும் வாகனங்கள் மட்டுமே, தமிழகத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றன. ஆனால், ஓசூரிலிருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து ஓசூருக்கும் தினமும் பைக்கில் பணிக்கு வந்து செல்லும் பல ஆயிரம் தொழிலாளர்கள் மட்டும், தங்களது நிறுவன அடையாள அட்டையை காண்பித்து, சென்று வந்தனர்.

அவர்களால், ஓசூரில் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், முறையான இ - பாஸ் இருந்தால் மட்டுமே, பணிக்கு சென்று திரும்ப முடியும் என, மூன்று நாட்களாக அதிகாரிகள் அறிவுறுத்தி வந்தனர். ஜூஜூவாடி சோதனை சாவடியில், நேற்று முன்தினம் மாலை, ஆய்வு செய்த, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் பிரபாகர், இ - பாஸ் இன்றி, தமிழகத்துக்குள் யாரையும் அனுமதிக்க வேண்டாம் என, உத்தரவிட்டார்.

இதையடுத்து, நேற்று காலை ஓசூரிலிருந்து, கர்நாடகாவுக்கு பணிக்கு சென்ற தொழிலாளர்களை, எல்லையில் தடுத்த அதிகாரிகள், கர்நாடகாவுக்குள் சென்றால், அங்கேயே தங்கி பணியாற்ற அறிவுறுத்தினர்.கர்நாடகாவிலிருந்து, இ - பாஸ் இன்றி, ஓசூர் வந்த தொழிலாளர்களையும், திருப்பி அனுப்பினர்.கர்நாடகாவுக்கு பணிக்கு செல்ல முடியாமல் தவித்த தமிழக தொழிலாளர்கள், 300க்கும் மேற்பட்டோர், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், மறியலில் ஈடுபட்டனர். எல்லையில், வாகன சோதனை தீவிரத்தால், தேசிய நெடுஞ்சாலையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X