ஊருக்குள் குளம்போல் கழிவுநீர் வரிசையூர் வரிசைகட்டும் பிரச்னைகள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 ஊருக்குள் குளம்போல்  கழிவுநீர்  வரிசையூர் வரிசைகட்டும் பிரச்னைகள்

நரிக்குடி:ஊருக்குள் குளம் போல் தேங்கி நிற்கும் கழிவுநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்காததால் தொற்று நோய் பரவும் அபாயத்தில் நரிக்குடி வரிசையூர் மக்கள் உள்ளனர். சிமென்ட் ரோடு, பேவர் பிளாக், சாக்கடை என எந்த அடிப்படை வசதியும் இல்லை.

வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் வீதிகளில் குளம் போல் தேங்கி நிற்கிறது. மக்கள் இதன் மீது நடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். துர்நாற்றத்துடன் கொசுவும் உற்பத்தியாக தொற்று நோய் பரவும் அபாயத்தில் மக்கள் உள்ளனர். வெளியூர் செல்ல 5 கிலோ மீட்டர் தூரம் உள்ள பஸ் நிறுத்தத்திற்கு நடக்க வேண்டி உள்ளது. வயதானவர்கள் சிரமப்படுகின்றனர். ஆழ்துளை கிணறு சப்ளை குடிநீர் உப்புநீராக உள்ளதால் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதை தவிர்க்க மினரல் பிளான்ட் அமைக்க வேண்டும்.

ரேஷனுக்கு 10 கி.மீ., நடை

ரேஷன் பொருட்கள் வாங்க 10 கிலோமீட்டர் தூரமுள்ள வீரசோழனுக்கு நடந்து செல்ல வேண்டியிருக்கிறது. வயதானவர்கள் நடந்து சென்று வாங்க முடியவில்லை. பகுதிநேர கடை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பாரதிராஜா, தனியார் ஊழியர்

தேவை மினரல் பிளான்ட்

தெருவில் ஏதங்கிய கழிவுநீரில் குழந்தைகள் விளையாடுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. சப்ளை குடிநீர் உப்பு கலந்த நீராக இருப்பதால் உடல் உபாதை ஏற்பட்டு பலர் சிரமப்படுகின்றனர். மினரல் பிளான்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தனலட்சுமி, குடும்பத் தலைவி

ரோடு அமைத்தும் நோ யூஸ்

ஊருக்குள் பஸ் விட பல்வேறு போராட்டங்களை நடத்தியும் நடவடிக்கை இல்லை. ரூ.பல லட்சம் செலவில் ரோடு தரமாக போட்டும் பயன் இல்லை. தெருக்களில் சாக்கடையுடன் சிமென்ட் ரோடு, பேவர் பிளாக் பதிக்க வேண்டும்.

முத்துராமலிங்கம், விவசாயி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X