சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மகனை அடித்து கொன்ற தந்தை தற்கொலை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

புதுக்கோட்டை; போதையில் தகராறு செய்த மகனை, கட்டையால் அடித்துக் கொன்ற தந்தை, தானும் தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் மேல்நிலைப்பட்டியை சேர்ந்தவர் பாலச்சந்திரன், 54. இவரது மகன் அருண்குமார், 24. இவர், தினமும் மது போதையில் வீட்டுக்கு வந்து, பெற்றோரிடம் தகராறு செய்துள்ளார். இதனால், மனமுடைந்த தாய் இந்திரா, பிரிந்துசென்று விட்டார்.நேற்று முன்தினம் இரவு, அருண்குமார் மது போதையில் வீட்டுக்கு வந்து தந்தையிடம் தகராறு செய்தார்.

ஆத்திரமடைந்த தந்தை கட்டையால், மகனை அடித்துள்ளார்; இதில், அவர் இறந்தார். பயந்துபோன பாலச்சந்திரனும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இளம்பெண் கொலைதஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை கார்காவயல் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல், 55. இவருக்கு சண்முகப்பிரியா, 25, என்ற மகளும், ராஜவசந்தசேகரன், 19 என்ற மகனும் உள்ளனர். பக்கத்துக்கு வீட்டை சேர்ந்தவர் குபேந்திரன், 60. மனைவி சரோஜா, 55. இவர்களின் மகன் குருபிரபு. நேற்று முன்தினம் மாலை, ராஜவசந்தசேகரனும், குருபிரபுவும் கிரிக்கெட் விளையாடினர். வீடு திரும்பிக் கொண்டிருந்த போது, ராஜவசந்தசேகரன், 'திருநங்கை போல கிரிக்கெட் விளையாடுகிறாய்' என, குருபிரபுவை கிண்டல் செய்தார். அவர் பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனால், ஆத்திரமடைந்த குருபிரவின் பெற்றோர், சக்திவேல் வீட்டுக்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இரு குடும்பத்தினருக்கும் இடையே கை கலப்பு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் தாக்கினர். குபேந்திரனும், அவரது மனைவியும் மண்வெட்டி பிடியால் சண்முகப்பிரியாவை தாக்கினர். இதில், தலையில் காயமடைந்த அவர் இறந்தார். பட்டுக்கோட்டை தாலுகா போலீசார், குபேந்திரன், சரோஜா, குருபிரபு ஆகிய மூவர் மீது கொலை வழக்குபதிவு செய்து, விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X