பொது செய்தி

தமிழ்நாடு

பார்த்த 30 நிமிடத்திலே ஓவியம் டீ மாஸ்டருக்குள் ஒளிந்திருக்கும் கலை

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 பார்த்த 30 நிமிடத்திலே ஓவியம்  டீ  மாஸ்டருக்குள் ஒளிந்திருக்கும் கலை

விருதுநகர்:பழங்காலத்தில் கிறுக்க, இடைப்பட்ட காலத்தில் துாரிகைகளால் தீட்ட, நவீன காலத்தில் டிசைன்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன ஓவியங்கள்.

ஓவியமானது மனதை சாந்தப்படுத்தி கவன கூர்மையை அதிகரிக்கிறது. அந்தவகையில் ஓவியர்கள் அமைதியானர்களாக, கவனிப்பு திறன் மிக்கவர்களாக உள்ளனர். கலை இயற்கை யானது. அது ஒவ்வொருவருக்கு உள்ளேயும் விதைக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் விருதுநகர் பாண்டியன்நகரை அடுத்த காந்திநகரில் வசிக்கும் டீ மாஸ்டர் அசோக் குமார் பார்த்த 30 நிமிடத்தில் ஒருவரின் முகத்தை அப்படியே வரைந்து விடுகிறார்.

ஆயில் பெயின்டிங், பென்சில் ஓவியங்கள், வாட்டர் கலர் என அனைத்து வகையான ஓவியங்களிலும் அசத்துகிறார். குடும்பத்தை காக்க டீ மாஸ்டராக பணிபுரிந்து கொண்டும், இன்னொரு பக்கம் தன் கலை ஆர்வம் விட்டு போகாமல் ஓவியம் வரைகிறார். டீக்கடை வருவோரிடம் நன்றாக பேச துவங்கிவிட்டால் அடுத்த நாளே அவரை ஓவியமாக வரைந்து பரிசளிப்பார். பிளஸ் 1 படித்து வரும் தன் மகள் பிரியதர்ஷினியையும் ஓவியத்தில் ஈடுபாடு உடையவராக மாற்றி வருகிறார். இவரும் பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு பெற்று வருகிறார். டீ மாஸ்டராக இருந்து கலைப்பணியில் சாதிக்கும் இவரை நாமும் பாராட்டுவோமே.
நண்பர்களுக்கு பரிசளிக்க வரைகிறேன்

பெரிய அளவில் படிப்பில் ஆர்வம் இல்லாததால் பல்வேறு தொழில்கள் செய்து டீ மாஸ்டராக பணிபுரிகிறேன். சிறு வயது முதலே ஓவியம் வரைவதில் ஆர்வமுண்டு. எப்படி வெளிக் கொண்டு வர வேண்டும் என்று தெரியவில்லை. காலப்போக்கில் நானே ஓவியம் வரைய துவங்கி கடந்த 3 ஆண்டுகளாக ஓவியம் வரைகிறேன். யாரேனும் ஒருவரை பார்த்தால் 30 நிமிடத்தில் ஓவியம் வரைந்து விடுவேன். நண்பர்களுக்கு பரிசளிப்பதற்காகவே வரைகிறேன். இது தவிர கோயிலில் சுவாமி படங்களும் வரைகிறேன்.

அசோக்குமார், டீ மாஸ்டர்

ஊக்கம் தரும் ஓவியங்கள்

க்ரையான், வாட்டர் கலர் ஒவியங்களில் அதிக ஈடுபாடு உண்டு. ஊரடங்கு விடுமுறையில் நிறைய விழிப்புணர்வு ஓவியங்கள் வரைந்துள்ளேன். இதை பார்த்து என்னையும், தந்தையும் பலர் பாராட்டி உள்ளனர். விடுமுறை நாட்களையும், பொழுது போகாத நேரங்களையும் ஓவியம் வரைவதிலே செலவிடுகிறேன். இது என்னை பல ஓவிய போட்டிகளில் பங்கேற்க ஊக்கப்படுத்தி உள்ளது. இன்னும் பல நுணுக்கங்களை கற்றறிந்து சிறப்பாக வரைவேன்.

பிரியதர்ஷினி, பள்ளி மாணவி

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X