பொது செய்தி

தமிழ்நாடு

அப்பியம்பாளையத்தில் இன்று மரக்கன்று நடவு

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், ஐந்து கட்டமாக, எட்டு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டன.தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் தண்ணீர் விட்டு பராமரிப்பதால், கன்றுகள் வேகமாக மரமாகிவிட்டன. ஒவ்வொரு திட்டத்திலும் வைத்த மரக்கன்றுகள், குறுங்காடுகளை போல் மாறியுள்ளன.இத்திட்டத்தில், பல்வேறு பசுமை அமைப்புகளும் கரம் கோர்த்து, மரம் வளர்ப்பு பணியை வேள்வியாக நடத்தி வருகின்றன. 'வனத்துக்குள் திருப்பூர்-6' திட்டம், கடந்த வாரம் துவங்கியது. 2வது நிகழ்ச்சி, இன்று அப்பியம்பாளையத்தில் நடக்கிறது.அவிநாசிபாளையம் - ஊதியூர் ரோட்டில் உள்ள ஸ்ரீ கரிச்சிகுமாரசாமி கோவில் வளாகத்தில், இன்று மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடக்கிறது.இத்திட்டத்தில் மரக்கன்று நட விரும்புவோர், 90470 86666 என்ற எண்களிலும், பசுமைப்பணியில் கரம் கோர்க்க விரும்புவோர், 98435 55800 என்ற எண்களிலும் தொடர்புகொள்ளலாம் என, திட் டக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X