சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மண் எடுத்தவர் மயக்கம்: தாசில்தார் கலக்கம்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

நாகர்கோவில்; மண் கடத்தியவர் மயக்கம் அடைந்ததால் பெண் தாசில்தார் கலக்கமடைந்தார்.குமரி மாவட்டம், ஈசாந்தி மங்கலத்தில் தாசில்தார் ராஜேஸ்வரி, அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார். திட்டுவிளையை சேர்ந்த ரெஜினால்டு, அனுமதி இல்லாமல், குளத்தில் மண் எடுத்தார். ஆவணங்களை கேட்ட போது, செங்கல் சூளைக்காக வேறுநபர் பெயரிலான அனுமதி சீட்டை காண்பித்தார். இதனால், ரெஜினால்டை வாகனத்தில் ஏற கூறியபோது, திடீரென மயக்கமடைந்து விழுந்தார்.

அதிர்ச்சி அடைந்த தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் கலக்கமடைந்து, அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு எந்த பிரச்னையும் இல்லை என்றும், அவர் நடித்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, நிம்மதி அடைந்த அதிகாரிகள், மண் கடத்தலில் ஈடுபட்டதாக ரெஜினால்டை கைது செய்தனர். மணல் அள்ளிய டிப்பரை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X