பொது செய்தி

தமிழ்நாடு

டிஜிட்டலுக்கு மாறும் பாடநூல்! படப்பதிவில் ஈடுபடும் ஆசிரியர்கள்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:ஆசிரியர்கள் மூலம் பாடங்களை, காணொலி பாடமாக மாற்றி, கல்வி டிவி மூலம், இயல்பான பாட வகுப்புகள் போல், மாணவர்களுக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியில் கல்வித்துறை களமிறங்கியுள்ளது.'கோவிட் 19' காரணமாக பள்ளிகள் திறப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கற்றல், கற்பித்தல் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்களுக்கு தங்கு தடையின்றி கல்வி வழங்க, பள்ளி கல்வித்துறை பல்வேறு முயற்சிகளைமுன்னெடுத்துள்ளது.
அதன் ஒரு பகுதியாக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பாடப்பகுதிகளை மாவட்டங்களில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களை கொண்டு படப்பதிவு செய்து, அனைத்து மாணவர்களுக்கும் டிஜிட்டல் பாட பொருள்களாக பாடங்களை ஆவணப்படுத்த உள்ளது. இதனை, 'ஹைடெக் லேப்' மூலம் வழங்கிட திட்டமிட்டு உள்ளது.இதுகுறித்து மாவட்ட கல்வி டிவி ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், 'முதலில் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடநுால்களில் உள்ள ஒவ்வொரு பாடப்பகுதியையும், அரைமணி நேர பாட தொகுப்பாக பிரித்து, டிஜிட்டல் காணொலி படமாக படம்பிடிக்கப்படும். இயல்பான பாட வகுப்புகள் போன்று இருக்கும்.இதனை மாணவர்கள் அவரவர் லேப்டாப்களில் எளிதாக பார்த்து பயன்பெறலாம். இதற்கான பணியில் பட்டதாரி ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X