பொது செய்தி

தமிழ்நாடு

மதுரையில் கொரோனாவிற்கு 7 பேர் பலி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

மதுரை; மதுரையில் நேற்று கொரோனாவிற்கு 7 பேர் பலியாகினர். 2வது முறையாக பாதிப்பு 200ஐ கடந்தது.மதுரையில் நேற்று ஒரேநாளில் 218 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

இதில் காய்ச்சல் அறிகுறியுடன் 103 பேர், தொற்று இருந்தோருடன் தொடர்பில் இருந்த 75 பேர், 3 கர்ப்பிணிகள், டாக்டர், நர்ஸ், போலீஸ், சுகாதாரப்பணியாளர்கள் என 32 பேர் அடங்குவர். மொத்த பாதிப்பு 1703 ஆக உயர்ந்தது. இதுவரை 563 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த 37 வயது ஆண், 62, 63, 67, 73 வயது முதியவர்கள் உட்பட 7 பேர் பலியாகினர்.
மொத்த இறப்பு 20ஐ கடந்தது.திண்டுக்கல்மதுரையில் இருந்து வந்த திண்டுக்கல் நிலக்கோட்டை 31 வயது போலீஸ்காரர், நத்தம் வந்த 39 லாரி கிளீனர், நத்தம் 25 வயது செவிலியர், 22 வயது ஆண், மதுரையைச் சேர்ந்த 20 வயது ஆண், பட்டிவீரன்பட்டி 40 வயது செவிலியர், பழநி 49 வயது பெண், 9 வயது சிறுவன், 15 வயது சிறுமி, வத்தலகுண்டு 23 வயது ஆண், நொச்சியோடைப்பட்டியைச் சேர்ந்த 43 வயது பெண் உட்பட 39 பேருக்கு கொரோனா உறுதியானது.தேனிதேனி மாவட்டத்தில் பொதுப்பணித்துறை பெண் மேற்பார்வை பொறியாளர், தபால் ஊழியர், பெரியகுளம், தேனி நகராட்சிகளின் பணியாளர்கள் என மொத்தம் 33 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.ராமநாதபுரம்ராமநாதபுரத்தில் நேற்று 74 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் பரமக்குடி 4 நர்சுகள், ஒரு லேப்டெக்னீசியன் அடங்குவர். மாவட்டத்தில் இதுவரை 772பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.பலி 2: ராமநாதபுரத்தை சேர்ந்த 58 வயது முதியவர், பரமக்குடி 70 வயது முதியவர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டனர். இருவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் நேற்று பலியாகினர்.சிவகங்கைசிவகங்கை மாவட்டம்காரைக்குடி அருகே பீர்க்கலைக்காடு ஆரம்ப சுகாதார நிலைய 46 வயது டாக்டர், தேவகோட்டை சருகணி 33 வயது ஆண், மதுரை நாகமலை புதுக்கோட்டை 37 வயது ஆண் என மூவருக்கு கொரோனா உறுதியானது.விருதுநகர்விருதுநகரில் 21, அருப்புக்கோட்டை 8, சிவகாசி 10, ராஜபாளையம் 9, சாத்துார் 2, வத்திராயிருப்பு 4, காரியாபட்டி மல்லாங்கிணர் 2 பேர் உட்பட 58 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது.இதில் கலெக்டர் அலுவலகத்தில் பணிபுரியும் 41 வயது ஏ.பி.ஆர்.ஓ., 46 வயது நிருபர் அடங்குவர்.காதலியுடன் ஓடி வந்தவருக்கு கொரோனாகுமரி மாவட்டம் மேக்காமண்டபம் அருகே செம்பருத்திவிளையை சேர்ந்த 19 வயதுஇளைஞர், உடுமலைப்பேட்டை தனியார் நிறுவனத்தில் பணியாற்றினார். அப்பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை காதலித்து, ஜூன் 17ல் சொந்த ஊருக்கு அழைத்து சென்றார். வீட்டில்நண்பர்களுக்கு விருந்து கொடுத்தார். இளைஞருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவரது காதலி, பெற்றோர், 9 நண்பர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X