பரவலுக்கு வழி: பஸ்களில் காணோம் சமூக இடைவெளி ; சரியான திட்டமிடல் இல்லாமால் தவிப்பு| Dinamalar

தமிழ்நாடு

பரவலுக்கு வழி: பஸ்களில் காணோம் சமூக இடைவெளி ; சரியான திட்டமிடல் இல்லாமால் தவிப்பு

Added : ஜூன் 27, 2020
Share

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பரவல் கிராமங்களை நோக்கி பயணிக்கும் நிலையில் பஸ்களில் போதிய சமூக இடைவெளி இல்லாது தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு வருகிறது. சரியான திட்டமிடலுடன் பஸ்களை இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை அவசியமாகிறது.

மாவட்டத்தில் தினமும் நடக்கும் மருத்துவ சோத னையில் பலர் தொற்றுக்கு ஆளாவது கண்டறியபடுகிறது. இந்நிலையில் தினமும் ஏராளமானோர் தங்களின் வாழ்வாதாரத்திற்காக பஸ்களில் பயணித்து வருகின்றனர். 60 சதவீத பயணிகளே பயணிக்க வேண்டிய நிலையில் பீக் ஹவர்சில் அதிகளவு பயணிக்கின்றனர். சமூக இடைவெளி என்பது முற்றிலும் இல்லை.

இதை தவிர்க்க ஒவ்வொரு தாலுகாவிலிருந்தும் காலை 7:00 மணிமுதல் 11:00, மாலை 4:00 முதல் இரவு 7:30 வரை பீக் ஹவர்சில் 10 நிமிடத் திற்கு ஒரு பஸ், மற்ற நேரங்களில் 15 நிமிடத்திற்கு ஒரு பஸ் இயக்கலாம்.

பஸ் ஸ்டாண்டில் 15 பயணிகள் இருந்தாலே பஸ்சை இயக்க கூறி வழித்தட ஸ்டாப்பில் நிற்கும் பயணிகள் ஏற்றி செல்லவேண்டும். ஆனால் தற்போது பஸ் ஸ்டாண்டில் சீட்டுகள் நிரம்பினால் மட்டுமே பஸ்கள் இயக்கபடுகிறது. இதனால் வழித்தட ஸ்டாப்களில் ஏறும் பயணிகளால் சமூக இடைவெளி இல்லாதநிலை ஏற்படுகிறது.

விழிப்புடன் பயணிப்போம்

கொரோனா பரவலை தடுக்க ஒவ்வொருவரும் பொறுப்புணர்வுடன் பயணிப்பது அவசியம். தினசரி வேலைக்காக மட்டுமே பயணிக்கவேண்டும். தேவையற்ற பயணம், குழந்தைகளை அழைத்து செல்வதை தவிர்க்கவேண்டும். பீக் ஹவர்சில் கூடுதல் பஸ்களை இயக்கினாலே பஸ்களில் இடநெருக்கடி குறைந்து போதிய சமூக இடைவெளியுடன் பாதுகாப்பான பயணம் உருவாகும்.

வேல்முருகன்,
சுயதொழில் முனைவோர், ஸ்ரீவில்லிபுத்துார்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X