பொது செய்தி

தமிழ்நாடு

விரைவில் வருது கூடுதல் இயந்திரம் கொரோனா அலுவலர் தகவல்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

விருதுநகர்:விருதுநகரில் கூடுதலாக மேலும் ஒரு பரிசோதனை இயந்திரம் வர உள்ளதாக கொரோனா கண்காணிப்பு மாவட்ட அலுவலர் மதுமதி கூறினார்.

அவர் கூறியதாவது: 17,493 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளதில் 1,900 பேருக்கு முடிவுகள் வரவேண்டியுள்ளது. பரிசோதனை இயந்திரம் ஒன்று மட்டுமே உள்ளதால் முடிவுகள் வருவதில் தாமதமாகிறது. கூடுதல் இயந்திரம் விரைவில் கொண்டு வரப்படும். இயந்திரங்களை கையாளும் சோதனை மையங்களில் கூடுதலாக 14 டெக்னீஷியன்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

இயந்திரம் வந்ததும் அவர்களும் பணியமர்த்தப்படுவர். கிராமங்கள் முழுவதும் 120 குப்பை வண்டிகளில் மைக் மூலம் கொரோனா விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவமனையில் 1,000 படுக்கைகள் தயார்நிலையில் உள்ளது. விருதுநகர்,ராஜபாளையம் மகப்பேறு பிரிவு சிறிய அளவில் உள்ளதால் நெரிசலின் காரணமாக கர்ப்பிணிகளுக்கு தொற்று அதிகம் ஏற்படுகிறது. இங்கு கிருமிநீக்கம் செய்யப்பட உள்ளது,என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X