பொது செய்தி

தமிழ்நாடு

வடக்கு ஸ்டேஷன் மூடல்: மனுக்கள் பெற புகார் பெட்டி

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

திருப்பூர்:வடக்கு போலீஸ் ஸ்டேஷன் மூடப்பட்டுள்ள நிலையில், பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெறும் விதமாக ஸ்டேஷன் முன்பு புகார் பெட்டி வைத்துள்ளனர்.திருப்பூர் வடக்கு போலீஸ் ஸ்டேஷனை சேர்ந்த எஸ்.ஐ., ஒருவர் போலீஸ் குடியிருப்பில் வசித்து வருகிறார். சென்னையில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வரும் இவரது மனைவி கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பூர் வந்தார். அவருக்கு பரிசோதனையில் கொரோனா உறுதி செய்யப்பட்டது.இதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் கணவர் பணியாற்றி வரும் வடக்கு போலீஸ் ஸ்டேஷன் ஒருங்கிணைந்த வளாகம் மூடப்பட்டது. இதனால், வடக்கு போலீஸ் ஸ்டேஷன் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, மூன்று நாட்களுக்கு மூட திட்டமிட்டுள்ளனர்.ஸ்டேஷன் மூடப்பட்டாலும், முக்கிய பணிகளும் எவ்வித தடையும் இல்லாமல் நடக்க கமிஷனர் அறிவுறுத்தியுள்ளார். புகார் மனுக்களை பெறும் விதமாக, ஸ்டேஷன் முன், புகார் பெட்டி வைத்துள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது மனுக்களை அளிக்கலாம். 2 மணி நேரத்துக்கு ஒரு முறை பெட்டி திறக்கப்பட்டு நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X