பொது செய்தி

தமிழ்நாடு

செய்திகள் சில வரிகளில்...விருதுநகர்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement

கர்ப்பிணிக்கு கொரோனா

காரியாபட்டி: காரியாபட்டி ஏ.நெடுங்குளத்தை சேர்ந்த கர்ப்பிணி பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனை சென்றார். பரிசோதனை செய்யப்பட்டதில் கொரோனா உறுதி செய்யப்பட்டது. அங்கேயே சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பிலிருந்த தாய் ,சகோதரி உட்பட 7 பேரை பரிசோதிக்க உள்ளனர்.

தண்டனை வழங்குங்க

சிவகாசி: தமிழ்நாடு காலண்டர் உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் ஜெய்சங்கர் அறிக்கை: போலீஸ் தாக்குதலில் இறந்த சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு உதவி, அரசுவேலைக்கு உத்தரவிட்ட அரசுக்கு நன்றி. மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொண்ட போலீசாருக்கு தண்டனை வழங்க வேண்டும்,என கேட்டுள்ளார்.

இணையவழி கருத்தரங்கம்

ராஜபாளையம்: ராஜபாளையம் ராம்கோ தொழில்நுட்ப கல்லுாரியில் இரண்டு நாள் சர்வதேச இணையவழி கருத்தரங்கம் நடந்தது. ராம்கோ குழும தலைவர் பி.ஆர்.வெங்கட்ராமராஜா, ராம்கோ தலைமை கல்வி அதிகாரி வெங்கட்ராஜ் பேசினர். 2357 பேர் பங்கேற்றனர். பேராசிரியர் கண்ணன் தொகுத்து வழங்கினார். துணைமுதல்வர் ராஜகருணாகரன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டம்

ராஜபாளையம்: சத்திரப்பட்டி மின் வாரியம் முன்பு காலிப்பணியிடங்களை நிரப்ப கோரி மார்க்சிஸ்ட் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் முனியாண்டி தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X