பொது செய்தி

தமிழ்நாடு

ரத்த தானத்துக்கு தொடர்ந்து ஊக்குவிப்பு: நோயாளிக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும்

Added : ஜூன் 27, 2020
Share
Advertisement
 ரத்த தானத்துக்கு தொடர்ந்து ஊக்குவிப்பு: நோயாளிக்கு தட்டுப்பாடின்றி கிடைக்கும்

திருப்பூர்;தமிழகத்தில், ரத்தம் தேவைப்படும் நோயாளிகளுக்கு, உடனடியாக ரத்தம் கிடைக்கும் வகையில், ரத்த தானம் செய்வோர் மற்றும் தன்னார்வலர்கள் தொடர்ந்து ஊக்குவிக்கப்படுகின்றனர்.தமிழகத்தில், ஒரு மாதத்துக்கு சராசரியாக, நோயாளிகளுக்கு வழங்குவதற்காக, 33 ஆயிரம் யூனிட் ரத்தம் தேவைப்படுகிறது. ஊரடங்கின்போது, சாலை விபத்து, அவசர கால சிகிச்சை போன்றவற்றுக்கான, ரத்த தேவை குறைந்தாலும், தலசீமியா நோயால் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிகள், ரத்த மாற்றம் தேவைப்படக்கூடிய நோயாளிகளுக்கு, உடனடியாக ரத்தம் தேவைப்பட்டது.கொரோனா நோயாளிகள் சிலருக்கும், ரத்தம் தேவைப்படுகிறது. ஊரடங்கு காலத்தில், பொதுப்போக்குவரத்தில் சிக்கல் இருந்ததால், ரத்த தானம் அளிப்பது குறைந்தது. ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டதும், ரத்த தான முகாம்கள் நடத்தப்பட்டதன் மூலம், ரத்த வங்கிகளில், ரத்த இருப்பு தேவையான அளவு தற்போது உள்ளது.சுகாதாரத்துறையினர் கூறியதாவது:தற்போது, பொதுப்போக்குவரத்துக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், ரத்ததானம் செய்வோருக்கு தடை கிடையாது. அவர்கள் தாராளமாக ரத்த தானம் வழங்கலாம். இவர்கள் தங்கள் அருகில் உள்ள ரத்த வங்கிகளைத் தொடர்பு கொண்டால், அவர்களே தேவையான உதவிகளைச் செய்வர்.ரத்தம் தேவைப்படுவோருக்கு உடனடியாக ரத்தம் கிடைக்கச் செய்யும் வகையில், 'eBloodServices' எனப்படும் செயலியை, மத்திய அரசு, தலைநகர் டில்லியில் துவங்கியது. ரத்தம் அவசரமாகத் தேவைப்படுவோர், 'செயலி' மூலம் தகவல் அனுப்பினால், செஞ்சிலுவைச்சங்கத்தினர், தேவையான ரத்தத்தைச் சேகரித்து, அவர்கள் உள்ள மருத்துவமனைக்கே கொண்டுவந்து அளிப்பர். இச்செயலியில், ரத்த வங்கிகள் குறித்த தகவல்கள் இடம்பெற்றிருக்கும்.அவசியம் ஏற்பட்டால், தமிழகத்திலும், இதுபோன்ற செயலியோ, வேறு செயல் திட்டமோ அறிமுகப்படுத்தப்படும். தமிழகத்தில், 90 அரசு ரத்த வங்கிகள் உள்ளன. ரத்த சேமிப்பு மற்றும் தன்னார்வ ரத்த தானம் தொடர்பான நடவடிக்கைகள் நியாயமான முறையில் தொடரப்பட வேண்டும் என்று மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.இவ்வாறு, சுகாதாரத்துறையினர் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X