ஊரடங்கை மீறி நடந்த திருமணத்தால் 15 பேருக்கு கொரோனா: மணமகன் தந்தைக்கு ரூ. 6 லட்சம் அபராதம்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement
fine, guests, wedding ceremony, Rajasthan, marriage, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஊரடங்கை மீறி மகன் திருமணத்தை நடத்தி 15 பேருக்கு கொரோனா வைரசை பரப்பிய மணமகன் தந்தைக்கு மாவட்ட நிர்வாகம் ரூ 6 லட்சம் அபராதம் விதித்தது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானின் பிஹீல்வாடா மாவட்டத்தில் சுபாஷ்நகரில் கடந்த ஜூன் 13-ம் தேதி திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊரடங்கு விதியை மீறி 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.


latest tamil news
இதையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறி அதிக நபர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவவும் காரணமாக இருந்த மணமகனின் தந்தை மீது ஊரடங்கு சட்டத்தை மீறியது, கொடிய தொற்று நோயை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. பிஹீல்வாடா மாவட்ட கலெக்டர் 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
01-ஜூலை-202004:12:46 IST Report Abuse
J.V. Iyer திருமணம் நடத்தினாலும், போனவர்களுக்கு எங்கே போனது புத்தி? ஒரு வேளை கலையான சாப்பாட்டிற்க்காக. மதுவிற்காக நாக்கை சப்புகொட்டின்கொண்டு, உயிரையே பணயம் வைக்கிறார்கள். இந்தியாவுக்கு மக்கள் தொகை அதிகம் தான். அதற்காக..
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-ஜூன்-202022:43:38 IST Report Abuse
மலரின் மகள் அரசு எப்படியாவது பணத்தை பிடுங்க வேண்டும் என்று குறியாக இருக்கிறது என்று சொல்கிறார்கள். இரண்டு சக்கர வாகனத்தில் யாரும் பயணிக்க கூடாதாம். மிதி வண்டியை கூட பறித்து திருமண மண்டபங்களில் வைத்து விடுகிறார்கள். பாதுகாப்பு கட்டினோம் என்று கூறி ஒரு நாளைக்கு நூற்றைம்பது ருபாய் வீதம் பதினான்கு நாட்கள் வரை வசூலிக்கிறார்கள் அதன் பிறகு தான் வாகனம் திருப்பி தரப்படுகிறதாம் அதுவும் வாகனத்தை பயன்படுத்த கூடாது என்று. இது சென்னை கொரட்டூர் பகுதியில் கூட கடை பிடிக்கப்படுகிறது. சென்னை முழுவதுமே இது தான் நிலவரம் என்று சொல்கிறார்கள். இது போன்ற செய்திகளை தரவேண்டும். அபராதம் என்பது எப்படியாவது மக்களிடம் இருந்து பணத்தை பிடுங்கினால் தான் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் என்ற நிலைக்கு சென்றுவிட்ட நிலையை பிரதிபலிக்கிறது. திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் தான் வைரஸ் பரவியது அதனால் தான் அந்த முதியவர் இறந்து விட்டார் என்று யாரவது ரத்த சம்பந்தமானவர்கள் கேஸ் பதிந்தார்களா? உள்ளூர் நிர்வாகம் செய்யும் மிக பெரிய தவறு இதில் சென்று முடியும் என்று தெரியுமா அவர்களுக்கு. நிச்சயம் பாதிக்கப்பட்டவர்கள், அது தான் திருமணம் செய்து வைத்தவர்கள் அவர்களின் சொந்தங்கள் என்று பலர், இவர்களுக்கு வாக்களிக்காமல் எதிரித்து வாக்களித்து அடுத்த முறை ஆட்சிக்கு இவர்கள் வராமல் தூக்கி எறியப்படுவதில் தான் அமையும் என்பதை அரசு கவனிக்கவேண்டும். திருமணத்தில் கலந்து கொண்டதால் கொரநா தொற்றியது என்றால் கலந்து கொண்ட அனைவருக்கும் வந்திருக்கவேண்டும், மணமகன் மணமகள் உட்பட. ஒரு தவறை செய்து விட்டு அதை தொடரவும் செய்கிறார்கள். எங்கும் வியாபித்திருக்கிறது அந்த வைரஸ் என்று என்றோ சொல்லியாகிவிட்டதல்லவா உலக சுகாதார அமைப்புக்கள் உட்பட பல்வேறு அமைப்புக்கள். நமது அரசு உண்மையை சொல்வதற்கு அஞ்சுகிறது என்றும் மேலும் ஆராயாமல் திடுமென செய்துவிட்ட மாபெரும் தவறால் தொடர்கின்ற அவஸ்தைகள் இப்போது. வாக்கு சீட்டை சரியாக பயன்படுத்ததால் இந்த வருடம் முழுவதற்கும் அனைவருக்கும் சந்திராஷ்டமம் மேலும் கூடுதலாக அஷ்டமத்து சனி என்று இப்போது பல செய்திகள் வைரலாகிறன்றன. என்ன செய்வது. ஜகன்மாதாவே இனி துணை. இன்னமும் திரு உள்ளமே இரங்காதா, ஜெகன் மாதா, ஏழைக்கருள் செய்யவாராய்.
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
28-ஜூன்-202010:39:09 IST Report Abuse
Girija அந்த அதிகாரிகளை ஆன்லைனில் பொள்ளாச்சி நாயகருக்கு பைன் போட சொல்லுங்கள் இங்க சிஸ்டம் டவுனாம், பைன் போட முடியலைலயாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X