ஊரடங்கை மீறி நடந்த திருமணத்தால் 15 பேருக்கு கொரோனா: மணமகன் தந்தைக்கு ரூ. 6 லட்சம் அபராதம்| Rs 6.26 lakh fine imposed for inviting over 50 guests for wedding ceremony in Rajasthan | Dinamalar

ஊரடங்கை மீறி நடந்த திருமணத்தால் 15 பேருக்கு கொரோனா: மணமகன் தந்தைக்கு ரூ. 6 லட்சம் அபராதம்

Updated : ஜூன் 28, 2020 | Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (8)
Share
fine, guests, wedding ceremony, Rajasthan, marriage, Coronavirus, Corona, Covid-19, Curfew, Lockdown

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஊரடங்கை மீறி மகன் திருமணத்தை நடத்தி 15 பேருக்கு கொரோனா வைரசை பரப்பிய மணமகன் தந்தைக்கு மாவட்ட நிர்வாகம் ரூ 6 லட்சம் அபராதம் விதித்தது.

இந்தியாவில் பரவியுள்ள கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. திருமணம் நிகழ்ச்சிகளில் 50 பேருக்கு மேல் பங்கேற்க கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜஸ்தானின் பிஹீல்வாடா மாவட்டத்தில் சுபாஷ்நகரில் கடந்த ஜூன் 13-ம் தேதி திருமண நிகழ்ச்சி நடந்தது. இதில் ஊரடங்கு விதியை மீறி 400-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற 15 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 72 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.


latest tamil news
இதையடுத்து, ஊரடங்கு விதிகளை மீறி அதிக நபர்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கவும், அதன் மூலம் கொரோனா வைரஸ் பரவவும் காரணமாக இருந்த மணமகனின் தந்தை மீது ஊரடங்கு சட்டத்தை மீறியது, கொடிய தொற்று நோயை பரப்பியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதியப்பட்டது. பிஹீல்வாடா மாவட்ட கலெக்டர் 6 லட்சத்து 26 ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X