இறந்தவருக்கு அவமானம் அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'

Added : ஜூன் 28, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
இறந்தவருக்கு அவமானம் அதிகாரிகள் 'சஸ்பெண்ட்'

ஐதராபாத்,: ஆந்திராவில் கொரோனாவால் இறந்தவரை ஜே.சி.பி.யில் மயானத்திற்கு எடுத்து சென்றது தொடர்பாக இருஅதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது.இங்கு ஸ்ரீகாகுளம் மாவட்டம் பலாசாவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற 72 வயது நகராட்சி பணியாளர் ஒருவர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நேற்று முன்தினம் இறந்தார்.அவரது உடலை உடனடியாக வீட்டில் இருந்து எடுத்துச்செல்ல வேண்டும் என அப்பகுதியில்
வசிப்போர் அவரது குடும்பத்தினரிடம் தகராறில்ஈடுபட்டனர்.இதையடுத்து இறந்தவரின் பேத்தி கொடுத்த
தகவலின் படி அங்குவந்த நகராட்சி பணியாளர்கள் இறந்தவரின் உடலை ஜே.சி.பி.இயந்திரத்தில் மண் அள்ளுவதற்கு பயன்படும் முன் பகுதியில் வைத்து மயானத்திற்கு எடுத்து சென்றனர். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் பரவியதால் நகராட்சி நிர்வாகத்திற்கு கண்டனங்கள் எழுந்தன.இது குறித்து முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கூறும்போது ''இது மனித தன்மையற்ற செயல். வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் உடல்களை கையாள வழிமுறைகள் உள்ளன. அவற்றை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார். பலாசா நகராட்சி கமிஷனர் நாகேந்திர குமார் மற்றும் சுகாதார ஆய்வாளர் என்.ராஜீவ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து ஸ்ரீகாகுளம் கலெக்டர் ஜெ.நிவாஸ் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-ஜூன்-202007:30:55 IST Report Abuse
ஆப்பு வுட்டா அந்த அதிகாரிகளே இறந்தவரை சுமந்துக் கிட்டுப் போய் புதைக்கணும்னு சொல்லுவாங்க போலிருக்கே... இன்னும்.கொஞ்சநாள் பொறுங்க... கொரோனாவுல கொத்துக் கொத்தா செத்துப் போனா இந்த மரியாதை கூட கிடைக்காம போயிடும். அப்போ மந்திரியே வந்து மனிதாபிமானத்தோட அடக்கம் செய்வாரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X