குறையும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்: இரு மாவட்ட குடிநீருக்கு சிக்கல்| Dinamalar

குறையும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்: இரு மாவட்ட குடிநீருக்கு சிக்கல்

Added : ஜூன் 28, 2020
Share
 குறையும் மஞ்சளாறு அணை நீர்மட்டம்: இரு மாவட்ட குடிநீருக்கு சிக்கல்

தேவதானப்பட்டி:தேவதானப்பட்டி மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் குறைந்து வருவதால் குடிநீருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இந்த அணை மொத்த உயரம் 57 அடியாகும். மேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள தலையாறு, வரட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழைநீர் அணையில் தேங்குகிறது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் 5 ஆயிரத்து 200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெற்று முதல்போக நெல்சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, வத்தலக்குண்டு பேரூராட்சிகளில் வாழும் மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக உள்ளது. கடந்த நவம்பர் மாதத்திற்கு பிறகு நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து இல்லை. தற்போது அணையில் 36 அடிநீர் உள்ளது. இதில் 20 அடிவரை மணல் மேவியுள்ளது.

தொடர்ந்து வறட்சி நிலவுவதால் அணையின் நீர்மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. இதனால் மஞ்சளாறு அணை நீரை குடிநீர் ஆதாரமாக கொண்ட கிராமங்களில் குடிநீர் பிரச்னை ஏற்படும் நிலை உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X