சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சின்னதேவி கண்மாயில் மணல் கொள்ளை

Added : ஜூன் 28, 2020
Share
Advertisement

தேவாரம்:தேவாரம் சின்னதேவி கண்மாயில் நடைபெறும் மணல் கொள்ளையால் குடிமராமத்து பணி மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இக்கண்மாயில் ரூ.32 லட்சம் மதிப்பீட்டில் குடிமராமத்து பணிகள் நடக்கின்றன. தளவாட பொருட்கள் கொண்டு செல்வதற்காக மடை அருகே பாதை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதை வழியாக இரவில் டிராக்டர்கள் மூலம் மணல் கடத்தல் ஜரூராக நடக்கிறது.

சின்னதேவி கண்மாய் நீரினை பயன்படுத்துவோர் சங்க செயலாளர் சிங்கராஜ் கூறுகையில், ''ஒரே நாள் இரவில் பல டிராக்டர்களை கொண்டு வந்து 50 யூனிட்டுக்கு மேல் மணல் அள்ளி கடத்தப்பட்டுள்ளது. கரை அமைக்க பயன்படும் மணலை அள்ளி கடத்துவதால் குடிமராமத்து மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து பொதுப்பணித்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க உறுதியளித்துள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X